ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். உடனடியாக பஹல்காமில் ராணுவம் குவிக்கப்பட்டு, காயமடைந்தோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். பிற சுற்றுலா பயணிகளும் உடனடியாக ஸ்ரீநகருக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உலக தலைவர்கள் உள்பட பலரும் தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஜம்மு-காஷ்மீர் முழுவதும் ராணுவத்தினர் தீவிரவாதிகளைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதலில் பலியானோர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஜம்மு-காஷ்மிரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம், பல நாடுகளை கொதிப்படைய செய்துள்ளது. அமெரிக்க பாதுகாப்பு துறையின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபி, இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தானும், அதன் உயர் ராணுவத் தலைமையுமே காரணம் என கூறி உள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடாக பாகிஸ்தானை முறைப்படி இந்தியா அறிவிக்க வேண்டும்.பாகிஸ்தான் ராணுவ தலைவர் ஜெனரல் அசிம் முனிரை பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும்.
இதையும் படிங்க: காஷ்மீர் தாக்குதல் விவகாரம்.. பதிலடி எப்படி இருக்கும்? அண்ணாமலை ஓபன் டாக்!

ஒசாமா பின்லேடன் குகையில் வாழ்ந்து பயங்கரவாத செயலில் ஈடுபட்டார். அசிம் முனிர் அரண்மனையில் வசிக்கிறார். இதுதான் இருவருக்கும் உள்ள ஒரே வித்தியாசம். இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை என பாகிஸ்தான் பாசாங்கு செய்யலாம். ஆனால் அதன் உண்மையான முகம் வேறு மாதிரியாக உள்ளது. அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் இந்திய பயணத்தில் இருக்கும்போது, கவனத்தை திசைதிருப்ப பாகிஸ்தான் மீண்டும் பயங்ரவாதத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது.

2023 அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் நாட்டுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் இப்படித்தான் தாக்குதல் நடத்தினர். அதே போலத்தான் பஹல்காமில் தாக்குதல் நடந்திருக்கிறது. இரண்டு தாக்குதல்களிலும் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பினர் காசாவில் அமைதியை விரும்பும் யூதர்களை குறிவைத்து தாக்கினர்.
அதேபோல பஹல்காமில் இந்து மக்களை குறி வைத்துள்ளனர். ஹமாஸ் தனது நோக்கத்தில் வெற்றி பெற்றதைப் போல பாகிஸ்தான் வெல்லக்கூடாது. வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால், இஸ்ரேல் ஹமாசுக்கு திருப்பிச் செய்ததை, இந்தியா பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கும் செய்ய வேண்டும்.இந்தியாவின் நட்பு நாடாக உள்ள ஒவ்வொரு நாடும் இந்தியாவுக்கு இந்த நேரத்தில் உதவி, ஐ.எஸ்.ஐ. அமைப்பை ஒழிக்க வேண்டும் என மைக்கேல் ரூபி கூறி உள்ளார்.
இதையும் படிங்க: முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை.. காஷ்மீர் விரைந்தது NIA.. உச்சக்கட்ட பரபரப்பு..!