ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் கொடூரமாக கொல்லப்பட்ட கோழைத்தனமான தாக்குதலுக்கு சில பயங்கரவாத அமைப்புகள் பொறுப்பேற்று இருந்தாலும், இந்தியா நேரடியாக பாகிஸ்தானை இதற்கு பொறுப்பேற்கச் செய்தது. தாக்குதல் நடந்த 24 மணி நேரத்திற்குள், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 5 பெரிய முடிவுகளை எடுத்தது.

முதல் முடிவு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வது. இதே ஒப்பந்தத்தின் கீழ்தான் கடந்த 60 ஆண்டுகளாக இந்தியா தனது நீர் பங்கை பாகிஸ்தானுக்கு வழங்கி வந்தது. ஆனால் இப்போது இந்த தண்ணீரை நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 19 வயது ஆயிஷாவை நினைவிருக்கிறதா..? தமிழரின் இதயம் கொடுத்த இந்தியா... கருவறுத்த பாகிஸ்தான்..!
பாகிஸ்தானின் 80% விவசாயம் சிந்து, ஜீலம் மற்றும் செனாப் நதிகளின் நீரைச் சார்ந்துள்ளது. இந்த ஆறுகளில் கட்டப்பட்டுள்ள பல அணைகள், நீர் மின் திட்டங்களில் இருந்தும் பாகிஸ்தான் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. இந்நிலையில், தண்ணீரை நிறுத்துவதற்கான இந்தியாவின் நடவடிக்கை பாகிஸ்தானில் தண்ணீர், மின்சாரம் இரண்டிற்கும் கடுமையான பற்றாக்குறையை உருவாக்கும். இது பாகிஸ்தானின் பொருளாதாரம், பொது வாழ்க்கை இரண்டையும் பாதிக்கும்.

இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளதால், பாகிஸ்தான் பிரதமர் இன்று அவசர தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்தியாவுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் இந்த அமர்வு நடைபெறும். கஜகஸ்தான் பயணத்தில் இருந்த ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு சீக்கிரமாகத் திரும்புகிறார்.
துணிச்சலான, சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக, இந்திய மோடி அரசு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தியுள்ளது. 65 ஆண்டுகால சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மோடி அரசு நிறுத்தி வைத்துள்ளது.

ஒப்பந்தத்தின்படி, கிழக்கு நதிகளான ரவி, பியாஸ் மற்றும் சட்லஜ் ஆகியவற்றின் மீது இந்தியா கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. மேற்கு நதிகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகியவற்றிலிருந்து பாகிஸ்தான் தண்ணீரைப் பெறுகிறது. இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு நன்மை பயக்கும், ஏனெனில் அது மொத்த நீர் ஓட்டத்தில் சுமார் 80% பெறுகிறது, இது விவசாயம் மற்றும் குடிநீருக்கு இன்றியமையாதது.

இது பாகிஸ்தானின் முக்கிய நீர் ஆதாரமாகும். இது கோடிக்கணக்கான பாகிஸ்தான் மக்களின் வாழ்வாதரமாக உள்ளது. நிலத்தடி நீர் குறைந்து வருவதால் பாகிஸ்தான் ஏற்கனவே கடுமையான நீர் மேலாண்மை சிக்கல்களை எதிர்கொள்கிறது. பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: லிப்ஸ்டிக் பூசினாலும் பன்றி பன்றிதான்... பாக்., கழுத்து நரம்பை வெட்டுங்கள்..! அமெரிக்கா அதிகாரி ஆவேசம்..!