சோழ இளவரசர் அருண்மொழிவர்மனை குறிக்கும் பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. மணிரத்தினம் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றுள்ள வீரா ராஜா வீரா என்ற பாடல் சிவஸ்துதி போலவே உள்ளதாக கூறி வழக்கு தொடரப்பட்டது.

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானுக்கு எதிராக இந்திய பாரம்பரிய பாடகர் ஃபயாஸ் வாசிபுதின் காப்புரிமை தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பொன்னியின் செல்வன் படத்தின் வீரா ராஜா வீரா பாடல் சிவா ஸ்துதி பாடலைப் போலவே உள்ளது என கருத்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி தீப்பெட்டிகளுக்கு புவிசார் குறியீடு..? அமைச்சர் தா.மோ அன்பரசன் விளக்கம்..!

அப்போது, சிவா ஸ்துதி பாடலால் ஈர்க்கப்பட்டு வீரா ராஜா வீரா உருவாக்கியதாக ஏ.ஆர் ரகுமான் தரப்பில் கூறப்பட்டது. அதனை ஏற்காத நீதிபதி, 2 கோடி ரூபாய் தொகையை செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். மேலும், பணத்தை டெல்லி உயர்நீதிமன்ற பதிவாளரிடம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஸ்பெஷல் அங்கீகாரம்..! கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு..!