இந்தியா-பாகிஸ்தான் இடையே சிந்து நதிநீர் ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்ததில் உலக வங்கியின் பங்கு முக்கியமானது. இந்த ஒப்பந்தத்தின் வரலாற்றில் உலக வங்கியின் பங்களிப்பு, நடுவர் போல் இருந்து இரு நாடுகளுக்குஇடையே நதிநீர் பங்களீட்டை சிறப்பாகச் செய்ததில் பெருமைக்குரியது.
ஆனால், காஷ்மீரின் பஹல்காம் மண்டலத்தில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் சிலர் சுற்றுலாப் பயணிகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்குப்பின் பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது.

அதில் முக்கியமானது பாகிஸ்தானுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தும் முடிவாகும். ஆனால் இந்த முடிவை எடுத்தபின் உலக வங்கிக்கு இந்தியா சார்பில் தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: பாகிஸ்தான் வீரருக்கு அழைப்பா? என் தேசப்பற்றை சோதிக்காதீர்கள்.. நீரஜ் சோப்ரா வருத்தம்..!
மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் செயலர் தேபாஸ்ரீ முகர்ஜி, பாகிஸ்தான் நீர்வளத்துறை அமைச்சர் சயத் அலி முர்தாசாவுக்கு எழுதிய கடிதத்தில் “சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா உடனடியாக நிறுத்துகிறது” எனத் தெரிவித்திருந்தார்.
ஒரு ஒப்பந்தத்திற்கு அடிப்படையானது நல்ல நம்பிக்கையுடன் ஒரு ஒப்பந்தத்தை மதிப்பது கடமை. ஆனால், அதற்கு ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தை குறிவைத்து பாகிஸ்தானால் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதம்தான் அதற்கு பதிலாக நான் பார்த்துள்ளோம்.

பாதுகாப்பில் நிச்சயமற்ற தன்மைகள் இந்தியாவின் முழு பயன்பாட்டு உரிமைகளை நேரடியாகத் தடுத்துள்ளன. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா விடுத்த முந்தைய கோரிக்கைகளுக்கு பாகிஸ்தான் பதில் அளிக்கவில்லை. இது நம்பிக்கை மீறல்” என கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு வட்டாரங்கள் தி இந்து (ஆங்கிலம்) நாளேட்டிடம் கூறுகையில் “சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பாகிஸ்தானுக்கு முறைப்படி தெரிவித்துவிட்டோம். உலக வங்கிக்கு தகவல் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை” எனத் தெரிவித்தனர்.
உலக வங்கியின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில் “ஒப்பந்தத்தில் உள்ள உறுப்பு நாடுகள் எடுக்கும், எடுத்த இறையான்மை சார்ந்த முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்க இயலாது. இந்தியா-பாகிஸ்தான் இடையே நதிநீரை பங்கீட்டுக் கொள்வதில் உருவாக்கப்பட்டதுதான் சிந்து நதிநீர் ஒப்பந்தம் இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக 60 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. எங்களால் குறிப்பிட்ட எல்லைக்கு மேல் செயல்பட முடியாது, ஆதலால் ஒப்பந்த நிறுத்தம் குறித்து ஏதும் செய்ய இயலாது” எனத் தெரிவித்தார்.

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்திவிட்டதால், இனிமேல் பாகிஸ்தானுடன் குறிப்பிட்ட கால இடைவெளியில் நீர்பாசன புள்ளி விவரங்களை பகிர்ந்து கொள்ளாது. சீனப், சட்லஜ், ஜீலம் நிதிகள் எனப்படும் மேற்கு நதிகளுக்கு குறுக்கே எழுப்பப்பட்டு வரும் நீர்மின் திட்டங்கள் குறித்தும் பாகிஸ்தானுக்கு தகவல்களை இந்தியா தெரிவிக்காது.
இனிமேல் மேற்கு நதிகளில் மழைக்காலங்களில் வெள்ளம், காட்டாறு வெள்ளம், கடும மழை ஏற்பட்டால் முன்புபோல் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கைத் தகவல்கள், வானிலை குறித்த விவரங்கள், நீர் இருப்பு, நீர் திறப்பு ஆகியவை குறித்து எந்தத் தகவல்களையும் இந்தியா தெரிவிக்காது.
இதனால் பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் திடீரென வறட்சியும் ஏற்படலாம், மழைக்காலத்தில் பெரும்காட்டாறு, வெள்ளமும் ஏற்படலாம்.
இதையும் படிங்க: இனி தண்ணீ தர மாட்டோம்..! சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு.. பாகிஸ்தானுக்கு இந்தியா அதிகாரப்பூர்வ கடிதம்..!