100 நாள் வேலை திட்டத்தில் விண்ணப்பித்த மாற்று திறனாளிகளுக்கு தனி அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்று திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். சென்னை கோட்டையை நோக்கி செல்ல முயன்ற மாற்றுத்திறனாளிகளை கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது, கலைந்து செல்ல மறுத்து தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக போலீசார் கைது செய்தனர். மேலும் உழைப்பாளர் சிலையருகே போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். மேலும், நாமக்கல், தஞ்சை உள்ளிட்ட இடங்களில் மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் தொடர்பாக பேசிய அமைச்சர் கீதாஜீவன், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பரிசீலிக்கப்படும் என்றும் மாற்றுத்திறனாளிகளின் நலனை பாதுகாக்கும் அரசாக திராவிட அரசு உள்ளது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளுக்கு இரு மடங்கு நிதி..! சட்ட முன்வடிவை முன்மொழிந்தார் முதலமைச்சர்..!

100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக கூறிய அமைச்சர், நிச்சயம் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும் என்று உறுதியளித்தார்.
இதையும் படிங்க: ஒருவழியாக ஓய்ந்தது சண்டை..! நீர் அடித்து நீர் விலகாது என மார்த்தட்டிக் கொள்ளும் வைகோ..!