கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் நுரையீரல் அழற்சி நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. போப் பிரான்சிஸ் உயிரிழந்ததை அடுத்து உலகெங்கும் உள்ள தேவாலயங்களில் 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதனிடையே, அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தியா முழுவதும் 3 நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், போப் இறுதி அஞ்சலி நிகழ்வில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் நாசர், எம்.எல். ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு எப்போது நடைபெறும் என வாடிகன் அரசு இன்று முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மனிதநேயத்தோடு திருச்சபையை வழி நடத்தியவர்..! பேரவையில் போப் பிரான்சிஸ்க்கு இரங்கல் தீர்மானம்..!

கத்தோலிக்க மதத்தின் மூத்த நிர்வாகிகள் உலகம் முழுவதும் இருந்து ரோமுக்கு புறப்பட்டு சென்றுள்ளதால் ரோம் நகரில் கட்டுக் கடங்காத கூட்டம் ஏற்பட்டு உள்ளது. எப்போதும், போப் ஆண்டவர்கள் மறைவுக்குப் பிறகு நல்லடக்க சடங்குகள் மிக விரிவாக நடப்பது வழக்கம். ஆனால் தனது இறுதிச் சடங்கு மிகவும் எளிமையான முறையில் நடைபெற வேண்டும் என்று போப் பிரான்சிஸ் விரும்பி உள்ளார்.

அவரது விருப்பப்படி மிக மிக எளிய முறையில் வாடிகன் நகருக்கு வெளியே நல்லடக்கம் செய்ய கத்தோலிக்க மூத்த மத குருக்கள் முடிவு செய்து உள்ளனர்.
இதையும் படிங்க: #BREAKING: கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார்..!