இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக இன்று பிரதமர் மோடி சவுதி அரேபியா புறப்பட்டுள்ளார். மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியாவுக்கு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக செல்கிறார். இதற்கு முன்பு 2016 ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் சவுதி அரேபியாவுக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். இதனிடையே இன்று சவுதி அரேபியா சென்றுள்ள பிரதமர் மோடி, சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

மேலும் சவுதி அரேபியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ள பிரதமர் மோடி, அங்குள்ள இந்திய தொழிலாளர்களுடன் கலந்துரையாட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது, முதலீடுகளை ஊக்குவிப்பது, எரிசக்தி விவகாரம் உட்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அவர் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வரும் 22, 23ம் தேதி.. சவுதி அரேபியா செல்கிறார் பிரதமர் மோடி..!

வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கல்வி, கலாச்சாரம் உட்பட பல துறைகளில் இந்தியாவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே வலுவான உறவு நீடித்து வரும் நிலையில் பிரதமர் மோடியின் இந்த பயணம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குளிர் மாதங்களுக்கு மாறப்போகும் சவுதி அரேபியா ஹஜ் பயணம்..!