பிரதமர் மோடி இன்று அரசு முறை பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி, சவுதி சென்று அங்கு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்திக்க உள்ளார். அதன் பின்னர் இருநாட்டு உறவு, வர்த்தகம் மற்றும் பிற முக்கியமான ஒப்பந்தங்கள் குறித்த ஆலோசனைகள் நடைபெறும் என்றும், சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சில மணி நேரங்களுக்கு முன்னதாக பிரதமர் மோடியின் விமான சவுதி அரேபியா எல்லைக்குள் நுழைந்தது.

விமானம் நுழைந்ததுமே சவுதி அரேபிய அரசு, பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாகவும், பாதுகாப்பு அளிக்கும் விதமாகவும் எஃப்15 ரக போர் விமானங்களை பிரதமரின் விமானத்திற்கு இரு பக்கமும் அணி வகுத்து வர செய்தனர். சவூதி அரேபியாவின் ராயல் ஏர் ஃபோர்ஸின் போர் விமானங்கள் பிரதமர் மோடியின் விமானத்திற்கு பாதுகாப்பு வழங்க மற்றும் மரியாதை செலுத்துவதற்காக அவரின் விமானத்தின் முன்னும், பின்னும் அணிவகுத்து சுற்றியபடி வந்தன.
இதையும் படிங்க: 2 நாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி..! இருநாட்டு உறவுகளை வலுப்படுத்த திட்டம்..!

பாதுகாப்பு மற்றும் மரியாதைக்காக கொடுக்கப்படும் பார்மேஷனில் விமானங்கள் அணி வகுத்து வந்தன. சவுதி அரேபியாவின் வான்வெளிக்குள் நுழைந்தபோது மோடியின் விமானத்திற்கு உடனடியாக இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டது. ராயல் பாதுகாப்பு இந்தியாவிற்கு ஒரு பக்கம் பெருமை. அதேபோல் பிரதமர் மோடியை பாதுகாக்க வேண்டிய கடமை சவுதிக்கு உள்ளது. அருகில் உள்ள வேறு சில மத்திய கிழக்கு நாடுகளுக்கு எதிரான நிலைப்பாடுகளை இந்தியா எடுத்துள்ளது.

அங்கே பல நாடுகளில் சிறிய, பெரிய அளவிலான போர்கள் நடந்து வருகின்றன. போராளி அமைப்புகள், தீவிரவாத அமைப்புகள் கூட அந்த பகுதிகளில் உள்ளன. இது போன்ற பிரச்சனைகளில் இருந்து பிரதமர் மோடியை பாதுகாக்கும் விதமாக 15 ராயல் விமானங்கள் அணி வகுத்து வந்தன. விமானத்தில் இருந்து இறங்கிய பிரதமர் மோடிக்கு 21 குண்டுகள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: பிரதமர் வீட்டுக்கு வந்த ஜே.டி.வான்ஸ்... வீட்டை சுற்றிக்காட்டி குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்த மோடி!!