ஜம்மு காஷ்மீர் மாநிலம் பகல்காம் என்ற பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் பரிதாபமாக 26 உயிர்கள் பறிப்போனது. உறவுகளை பறிகொடுத்த மக்கள் கதறி துடிக்கும் சம்பவம் காண்போரைக் கண்கலங்க செய்கிறது. இது போன்ற தீவிரவாத தாக்குதல்கள் இனி நடைபெறாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன.

குறிப்பாக மத்திய அரசு பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது. அதில் முக்கியமானது வாகா எல்லை உடனடியாக மூடப்படும் என அதிரடியாக அறிவித்தது மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள விசா பெற்ற பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேறவும், இனி பாகிஸ்தானியர்கள் இந்தியா வர விசா கிடையாது என்றும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடைபெறாமல் இருக்க மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, திருப்பதி திருமலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு விழுந்த பலத்த அடி - அதிரடி ஆக்ஷனில் இறங்கிய பிரதமர் மோடி

திருப்பதி மலைப்பாதையில் இணைப்புச் சாலை அருகே வாகனங்கள் தீவிரமாக தணிக்கை செய்யப்படுகின்றன. சந்தேகத்திற்கு இடமான வாகனங்களை தீவிரமாக சோதனை செய்ய தேவஸ்தான நிர்வாக ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நிகழ்ந்ததை கருத்தில் கொண்டு அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பதி திருமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. பகல்காம் பயங்கரவாத தாக்குதலின் எதிரொலியாக திருப்பதியில் வழக்கத்தை விட பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மன்னிக்க முடியாத குற்றம்.. என்ன செய்யுது மத்திய அரசு? செல்வப்பெருந்தகை ஆவேசம்..!