ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று முன்தினம் இந்திய ராணுவனத்தினர் போல் சீருடை அணிந்து வந்த பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 26 பேர் இறந்தனர். 17 பேர் காயமடைந்தனர். இந்த துயர சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ட் ஃபோர்ஸ் என்ற பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்ற உள்ளது.
இந்த பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு பல்வேறு அதிரடி முடிவுகள் வெளியாகியது.

இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே ஒன்றுக்குள் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறந்து விடுவதை இந்தியா நிறுத்தி உள்ளது. பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு தருவதை நிறுத்தும்வரை இந்தியா தண்ணீர் தராது என்றும் அறிவித்துள்ளது.
இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து இன்று பாகிஸ்தான் பிரதமர் முகமது ஷெபாஸ் ஷரீஃப் தலைமையில் நடைபெற்ற தேசியப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தானை விட்ராதீங்க.. இஸ்ரேல் போல இந்தியா இறங்கி அடிக்கணும்.. அமெரிக்க மாஜி அதிகாரி ஆவேசம்..!

1972 ஆம் ஆண்டு போடப்பட்ட சிம்லா ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தியா பதிலடி கொடுத்தால் அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என பாகிஸ்தான் அரசு அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் இந்தியாவின் எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் சென்ற இந்திய பாதுகாப்புப் படை வீரரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்துள்ளது. 182வது பிஎஸ்எஃப் பட்டாலியனைச் சேர்ந்த பி.கே.சிங்.

புதன்கிழமை மதியம் இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில் அவர் அருகில் பணியில் இருந்தார். அவர் சீருடையில் இருந்துள்ளார். அவரிடம் துப்பாக்கியும் இருந்துள்ளது. வழக்கமான பணி நடவடிக்கையின் போது, பி.கே.சிங் கவனக்குறைவாக இந்திய எல்லையை தாண்டி பாகிஸ்தான் பகுதிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.
அவர் பாகிஸ்தான் எல்லைக்குள் எப்படி சென்றார் என்பது தெரியவில்லை.தற்போது கோடை காலம் என்பதால் எல்லைப்பகுதிகளில் ஓடும் ஆறுகள் வறண்டதால் தவறுதலாக பாகிஸ்தானுக்குள் சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் நிழலுக்காக விவசாயிகளுடன் ஒதுங்கியபோது எல்லை தாண்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட பி.கே.சிங்கை பாதுகாப்பாக மீட்பது குறித்து இந்தியா-பாகிஸ்தான் எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு இடையே கொடிக் கூட்டம் எனப்படும் flag meetings நடைபெற்று வருகிறது. பாதுகாப்பாகவும் விரைவாகவும் திரும்புவதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: காஷ்மீரில் தேடுதல் வேட்டை.. காட்டுக்குள் பதுங்கிய தீவிரவாதிகள்.. ஆக்ஷனில் இறங்கிய இந்திய ராணுவம்..!