பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதன் மூலமும், பாகிஸ்தானியர்களுக்கான சார்க் விசா தள்ளுபடி திட்டத்தை (எஸ்.வி.இ.எஸ்) ரத்து செய்வதன் மூலமும் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய அரசு பதிலளிக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும் முப்படைகளின் தளபதிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்ககு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, பாகிஸ்தானுடனனா சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

பாகிஸ்தானியர்கள், இந்தியாவை விட்டு 48 மணிநேரத்தில் வெளியேற கெடு விதிக்கப்பட்டது, வாகா, அட்டாரி எல்லைகள் மூடப்பட்டன, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
மேலும் சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு நீர் திறந்துவிடப்படுவது இன்று நிறுத்தப்பட்டது. இதனிடையே சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தியா- பாகிஸ்தான் இடையே 1972-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிம்லா ஒப்பந்தம் தான் இரு நாடுகளிடையேயான போர் பதற்றத்தைத் தணிக்கும் உடன்படிக்கையாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: சிந்து நீரை நிறுத்துவது போருக்கு சமமான நடவடிக்கை.. இந்தியாவை விமர்சித்த பாகிஸ்தான்!!

சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதன் மூலம் இந்தியாவுடனான போருக்கு அந்த நாடு தயாராகிவிட்டதாக பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 1971-ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தான் எனப்படும் இன்றைய வங்கதேச விடுதலைக்காக பாகிஸ்தான் - இந்தியா இடையே போர் நடைபெற்றது. இந்தப் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் வங்கதேசம் என்கிற தனி சுதந்திர நாடு உருவானது.
இதனையடுத்து 1972-ம் ஆண்டு சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தானது. 1972-ம் ஆண்டு கையெழுத்தான சிம்லா ஒப்பந்தத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியும் பாகிஸ்தான் அதிபர் ஜூபிகர் அலி பூட்டோவும் கையெழுத்திட்டிருந்தனர். இரு நாடுகளிடையேயான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தன்னிசையாக எந்த ஒரு நாடும் மாற்ற முடியாது என்கிறது சிம்லா ஒப்பந்தம்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ்தான், இந்தியாவிடம் இருந்த 90,000 பாகிஸ்தான் போர் கைதிகள் அப்போது ஒப்படைக்கப்பட்டனர். மேலும் சிம்லா ஒப்பந்தம்தான், இந்தியா- பாகிஸ்தான் இடையேயான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை இருநாடுகளிடையேயான எல்லையாகவும் நிர்ணயித்தது. அத்துடன் காஷ்மீர் பிரச்சனையில் ஐநா சபை உள்ளிட்ட 3-வது நாடுகளின் தலையீட்டையும் இந்த சிம்லா ஒப்பந்தம் நிராகரிக்கிறது.
தற்போது சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாகிஸ்தான் தன்னிச்சையாக அறிவித்திருப்பதன் மூலம், இந்தியாவுடன் போரிட தயார் என்பதை தெரிவிக்க தான் பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது என பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அமித் ஷா கையில் ரெட் ஃபைல்... அமெரிக்கா, சீனாவுக்கு அழைப்பு... பாகிஸ்தான் சம்பவம் லோடிங்..!