காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பேசினார். பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து போராட இரு தலைவர்களும் தீர்மானித்தனர். 2019 புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நடந்த பஹல்காமில் நடந்த மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலாக இந்தத் தாக்குதல் கருதப்படுகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசினார்.இந்தியாவில் நடந்த இந்த பயங்கரவாத தாக்குதலை இஸ்ரேல் கடுமையாக கண்டித்தது. அவர் இந்தியாவுடனான தனது ஒற்றுமையைக் காட்டினார். தாக்குதலின் தீவிரம் குறித்து பிரதமர் மோடி நெதன்யாகுவிடம் விளக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ்தளப்பதிவில், ''இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பிரதமர் மோடியை அழைத்து இந்திய மண்ணில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளார். இந்திய மக்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் அவர் தனது இரங்கலைத் தெரிவித்தார். எல்லைக்கு அப்பால் இருந்து இந்த காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதல் குறித்து பிரதமர் மோடி தகவல் அளித்தார். மேலும் குற்றவாளிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும், நீதியின் முன் நிறுத்துவதற்கான இந்தியாவின் உறுதியை மீண்டும் வலியுறுத்தினார்'' எனக் கூறினார்.
இதையும் படிங்க: அவர்களை மண்ணில் புதைக்கும் நேரம் வந்துவிட்டது... பாகிஸ்தான் மீது மோடி ஆவேசம்..!
இஸ்ரேலிய தூதர் ரூவன் அசார் இந்த தாக்குதலைக் கண்டித்தார். ''பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான தொழில்நுட்பம், முறைகள், உளவுத்துறையை வழங்குவதில் இஸ்ரேல் இந்தியாவுடன் தொடர்ந்து ஒத்துழைக்கும் என்று அவர் கூறியிருந்தார். இந்த தாக்குதலை உலகம் முழுவதும் கண்டித்து வரும் நேரத்தில் பிரதமர் மோடிக்கும், நெதன்யாகுவுக்கும் இடையிலான உரையாடல் நடந்தது.

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பரோட்டிடம் இருந்து அழைப்பு வந்தது. பிரான்சும், இந்தியாவுடன் தனது ஒற்றுமையைக் காட்டியது. இந்த தாக்குதலுக்கு கனடா தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கனடா செனட்டர் லியோ ஹவுசாகோஸ் இந்த தாக்குதலை "நம்பிக்கை, மனிதகுலத்தின் மீதான காட்டு மிராண்டித்தனமான தாக்குதல்" என்று விவரித்தார். குற்றவாளிகளை விரைவில் தண்டிப்பது பற்றி அவர் பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய மக்களுக்கும் அமெரிக்காவின் முழு ஆதரவும் ஆழ்ந்த அனுதாபங்களும் இருப்பதாக டொனால்ட் டிரம்ப் கூறினார். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது என்றும், பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு "கொடூரமான தாக்குதலுக்கு" காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த இந்தியாவுக்கு முழு ஆதரவையும் அளிப்பதாக டிரம்ப் சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.

பஹல்காம் தாக்குதலுக்கு ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து, பிரான்ஸ், இஸ்ரேல், ஈரான் மற்றும் பல உலகத் தலைவர்களும் கடுமையான கண்டனச் செய்திகளை வெளியிட்டனர்.
ரஷ்ய தூதரகத்தின்படி, பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் இந்திய கூட்டாளிகளுடன் ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதற்கான ரஷ்யாவின் உறுதிப்பாட்டை ஜனாதிபதி புடின் மீண்டும் வலியுறுத்தினார். மேலும் பல நாடுகளும் இந்தியாவை ஆதரித்து வருகின்றன. பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

ரஷ்ய ஊடக தகவல்படி, இந்தியாவின் விமானம் தாங்கிக் கப்பல் சென்று கொண்டிருக்கும் பகுதியில் பாகிஸ்தான் 'பறக்கத் தடைசெய்யப்பட்ட மண்டலம்' என்று அறிவித்துள்ளது. இரண்டு அணுசக்தி நாடுகளுக்கு இடையிலான நிலைமை வேகமாக மோசமடைந்து வருகிறது. 'பெரிய விஷயம் நடக்கலாம்.' எனக் கூறியுள்ளது. இந்த எச்சரிக்கை தெற்காசியா ரீதியாக மட்டுமல்லாமல் உலகளாவிய பாதுகாப்பின் பார்வையிலும் தீவிரமானதாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் இராணுவ மோதலை நோக்கி நகர்கின்றனவா? என்ற கேள்வி எழுகிறது.
இதையும் படிங்க: இந்து கோயில் உண்டியலில் காசு... நீ சட்டம் போடுவியா மோடி? இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக சு.வெ சுளீர்..!