எந்த படமாக இருந்தாலும் சங்கரை போல பிரமாண்டமாக காண்பித்து அதனை தன் பாணியில் எடுத்து ஹிட் கொடுப்பவர் என்ற தான் அட்லீ, இவர் இயக்கிய எந்த படமும் இதுவரை தோல்வி அடைந்தது இல்லை. இப்படி இருக்க, இயக்குநர் ஷங்கரிடம், நண்பன் மற்றும் ரஜினியின் எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்து ஷங்கரின் முழுவித்தையையும் கற்று கொண்ட அட்லீ இதுவரை தமிழில் ஐந்து வெற்றிப்படங்களை கொடுத்து தற்பொழுது ஆறாவது படத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

2013ம் ஆண்டு வெள்ளித்திரையில் முதல் இயக்குனராக "ராஜா ராணி" திரைப்படத்தில் மொழிபெயர்ப்பு. இது "தி கிங் அண்ட் குயின்" படத்தின் காப்பியாக இருந்தாலும் காதல் மற்றும் நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஏஆர் முருகதாஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா நஜிம் ஆகியோர் நடித்துள்ளனர். சத்யராஜ், சந்தானம், சத்யன் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் அட்லீக்கு முதல் படியாக அமைந்தது.
இதையும் படிங்க: இத்தனை ஹீரோயின்களும் எனக்கா..! அல்லு அர்ஜூனுக்கு ஷாக் கொடுத்த அட்லீ..!

அட்லீயின் இரண்டாவது திரைப்படம் தெறி, 2016வது வருடம் கலைப்புலி எசு.தாணுவிஜய் தயாரிப்பில், அட்லீ இயக்கியத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் விஜய், ஏமி ஜாக்சன், சமந்தா, ராதிகா சரத்குமார், பிரபு முதலியோர் நடிப்பில் உருவான திரைப்படம். இந்த படம் வெளியாகி ரூ.100 கோடி வசூல் செய்து அட்லீயை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றது.

அட்லீயின் மூன்றாவது திரைப்படம் மெர்சல், 2017 தீபாவளி அன்று ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், அட்லீயின் இயக்கத்தில், இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் வெறித்தனமான இசையில் விஜய், காஜல் அகர்வால், எஸ். ஜே. சூர்யா, வடிவேலு, சமந்தா, நித்யா மேனன், கோவை சரளா, ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மெர்சல். இப்பத்தில் "மதராஸி நஹி மதுர வாசி" என்ற டைலாக் சொன்னதும் விஜயின் எண்ட்ரி காட்சிக்கு திரையரங்கமே அதிர்ந்தது.

அட்லீயின் நான்காவது திரைப்படம் "பிகில்", 2019 தீபாவளிக்கு முன்தினம் கல்பாத்தி எஸ்.அகோரம் மற்றும் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிபில், அட்லீ இயக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் இசையில், விஜய், நயன்தாரா, விவேக், ஜாக்கி செராப், கதிர், யோகி பாபு ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம். விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரூ.300 கோடி வசூலை அள்ளி தந்தது.

இதனை தொடர்ந்து மீண்டும் விஜய்யை வைத்து படம் எடுப்பார் அட்லீ என அனைவரும் கூறிக்கொண்டு இருக்கையில் தனது குருவான ஷங்கர் செய்த ஒரு காரியத்தை அட்லீ செய்தார், அதுதான் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தது.
பாலிவுட்டில் எடுத்தவுடனே ஷாருக்கானை வைத்து "ஜவான்" படத்தை எடுத்தார். படம் ஓடாது என்று விமர்சனம் செய்தவர்கள் வாய்பிளக்கும் அளவிற்கு படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து அனைவரையும் திக்குமுக்காட வைத்தது.

இப்படி பல படங்களை எடுத்த அட்லீ முதலில் சல்மான் கானை வைத்து தனது அடுத்த படத்தை எடுக்க இருப்பதாக கூறிவந்த நிலையில், திடீரென புஷ்பா படத்தின் மாஸ் ஹீரோவான அல்லு அர்ஜுனை வைத்து படம் எடுக்க இருப்பதாக கூறினார். மேலும் இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை பிரியங்கா சோப்ரா என அனைவரும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்பொழுது இயக்குனர் அட்லீயின் 6வது படமும் அல்லு அர்ஜுனின் 22வது படமுமான பிரமாண்ட படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த சூழலில் தயரிப்பாளர்கள் மத்தியில் கால்ஷீட் கொடுக்க நேரமில்லாமல் சுற்றி வரும் அட்லீயின் படங்களை தயாரிக்க மாட்டோம் என ஒரு தாயரிப்பாளர்கள் கூட்டமே சொல்லி ஒற்றுமையாக இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், இயக்குனர் அட்லீ தனது ஜவான் படத்திற்கு பிறகு, ஹிந்தியில் இருந்து மாறி தெலுங்கில் படம் எடுக்க ஆசைப்பட்டார். அதற்காக பல தெலுங்கு தயாரிப்பாளர்களிடம் பேசியுள்ளார். அனைவருக்கும் கதை பிடித்து போக, படம் தயாரிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த படத்திற்கு தனது சம்பளம் மட்டும் ரூ.100 கோடி வேண்டும் என கேட்க, அனைவரும் பதறி உள்ளனர்.

இவரும் 100 கோடியில் இருந்து ஒரு ரூபாய் கூட குறைப்பதாக தெரியவில்லை. எனவே அவரிடம் தெலுங்கு தயாரிப்பாளர்கள் நீங்கள் கேட்கும் சம்பளத்தை எங்கள் இயக்குநர்களுக்கே இதுவரை கொடுக்க வில்லை. இப்பொழுது உங்களுக்கு கொடுத்தால் நாளை அவர்களும் எங்களிடத்தில் இதே சம்பளம் கேட்பார்கள் என கூறி அவரை அனுப்பியுள்ளனர். மேலும், அங்கு அவர்கள் ரிஜெக்ட் செய்த பின்பு தான் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து இந்த பிரமாண்டமான திரைப்படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் அட்லி.
இதையும் படிங்க: ரூ.1000 கோடி பட்ஜெட் படங்களில் நடிகை சமந்தா..! கம்பேக்கில் ஜாக்பாட் அடித்து சாதனை..!