கடந்த ஆண்டு ஜூலை மாதம் இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. ஹாரர் மற்றும் காமெடி படமாக பார்க்கப்பட்ட இந்தப் படத்தில் சுரபி, ரெடின் கிங்ஸ்லி, ‘லொள்ளு சபா’ மாறன், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் அடுத்த பாகம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்களை கூறிவந்த நிலையில், சமீபத்தில் அதற்கான அறிவிப்பு வெளியானது.

அதன்படி, ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தை இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனைவரும் எதிர்பார்த்த இந்த படம் மே 16ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது. இதனால் இப்படத்தை காண மக்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: சசிகுமாருடன் நடிக்க ஆசைப்பட்டேன் நடித்தேன்..! படம் அப்படி இருக்கும் - நடிகை சிம்ரன் ஓபன் டாக்..!
இந்த சூழலில், மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நடிகர் ஆர்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சந்தானம். இந்த படம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக உள்ளநிலையில், தற்பொழுது நடிகர் சிம்பு உடன் படம் நடிக்க உள்ளதாக சந்தானம் தெரிவித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வசூல் ராஜா MBBS திரைப்படத்தை போல், கமெர்ஷியல் கலந்த ஜாலி திரைப்படமாக உருவாகி வரும் STR49 படத்தில் சிம்பு நடித்து வருகிறார். அதில் அவருடன் நடிகர் சந்தானமும் நடித்து வருகிறார்.

இப்படி இருக்க, நடிகர் சிம்புவுடன் வல்லவன், காளை, சிலம்பாட்டம், வானம் மற்றும் ஒஸ்தி போன்ற படங்களில் ஹிட் கொடுத்த சந்தானம் பத்துவருடங்களுக்கும் மேலாக டிடி ரிட்டன்ஸ், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இங்கு நான் தான் கிங்கு, குளு குளு, சபாபதி என பல படங்களில் ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். இந்த நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான மதகஜராஜா படத்தை நினைவுகூர்ந்த சந்தானம் சுந்தர் சி வாய்ச்சொல் பலித்துவிட்டது என்றார். அதன்படி, மே 16ம் தேதி வெளியாக உள்ள டிடி ரிட்டன்ஸ் நெக்ஸ்ட்லெவல் படத்துக்கான ஃப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சந்தானம், " 12 வருடம் கழித்து மதகஜராஜா வெளியாகிறது என கேள்விப்பட்டதும் எனக்கு சிறியதாக ஒரு பயம் வந்தது.

ஏனெனில் 12 வருடங்களுக்கு முன்பு நான் செய்த காமெடியெல்லாம் இப்போது ஒர்க் அவுட் ஆகுமான்னு நினைத்தேன். ஆனால், அந்த காமெடிகள் இப்பொழுதும் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. படபிடிப்பு முடிந்த பொழுது இயக்குனர் சுந்தர்.சி என்னிடம் சொன்னது இன்றும் என் நினைவில் உள்ளது. 'சந்தானம், உங்க நேரம் மிகவும் உச்சத்துல இருக்குது. நீங்க தொட்டது எல்லாம் துலங்குது. அதனால் கண்டிப்பா பாருங்க 'மதகஜராஜா'படத்திலும் உங்க போர்ஷன் பெரிய ஹிட் ஆகும்னு நினைக்கிறேன் என்றார்.

அந்த வார்த்தை இப்பொழுது பலித்துவிட்டது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கேமராவுக்கு பின் நடிகர்களின் கோர முகம்..! ஹீரோக்கள் மீது மாளவிகா மோகனன் குற்றச்சாட்டு..!