"உனக்கும் எனக்கும்... உனக்கும் எனக்கும் உள்ள பொருத்தம் யாருக்கு இங்க வருத்தம்" என்ற பாடலை நினைவு கூர்ந்தாலும், முருங்கைக்காயை பார்த்தாலும். நம் நினைவுக்கு அடுத்த நொடியே வருபவர் தான் கே.பாக்கியராஜ். இவரது படங்களை ரசிக்காதவர்கள் ஒருவரும் இருக்க முடியாது. அதே போல் இவரது நடிப்பில் வெளியான படங்களையும் யாராலும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு இவரது இயக்கம், நடிப்பு, நடனம், குரல்,இசை என அனைத்தையும் ரசிக்கும் கூட்டம் இங்கு உள்ளது.

இப்படி இருக்க, பாக்யராஜின் சினிமா பயணம் ஆரம்பித்தது இயக்குனர் பாரதிராஜாவிடம் இருந்து தான். 1978-ம் ஆண்டில் இயக்குனர் பாரதிராஜா தனது முதல் படத்தை இயக்கிய பொழுது அவருடன் உதவி இயக்குனராக இருந்து தனது சினிமா வாழ்க்கையை துவங்கினார் பாக்கியராஜ். இதனை அடுத்து, பாரதிராஜாவின் இரண்டாவது படமான 'கிழக்கே போகும் ரயில்' என்ற திரைப்படத்தில் கவுண்டமணியுடன் ஒரே ஒரு காட்சியில் நடித்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல் அதிலும் பாரதிராஜாவுக்கு உதவி இயக்குனராக இருந்தார். இதற்கு பின், பாரதிராஜாவின் மூன்றாவது படமான 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தில் கொஞ்சம் முன்னேறி உணவு விடுதிப் பணியாளர் வேடம் அணிந்து தனது சொந்த வசனத்தில் இரண்டு காட்சிகள் பேசி நடித்து பாக்கியராஜையே மிரளவைத்தார்.
இதையும் படிங்க: இயக்குனர் பாலாவை நம்பினேன்.. பரோட்டா போடுகிறேன்..! மனவருத்தத்துடன் பேசிய இளம் நடிகர் யுவன்..!

இதனை அடுத்து, இயக்குனராக புது அவதாரம் எடுத்த பாக்யராஜ் 'சுவர் இல்லாத சித்திரங்கள்' என்ற படத்தை நடிகர் சுதாகர் மற்றும் நடிகை சுமதி ஆகியோரை வைத்து நகைச்சுவையாகவும், கருத்துடனும் முதன் முறையாக எடுத்து மக்கள் மனதில் சிறந்த இயக்குனராக வலம் வந்தார். இதனை அடுத்து பல படங்களை அவர் எடுத்தாலும் நடித்தாலும் அவருக்கு பெயரை தேடித்தந்த படம் தான் 'முந்தானை முடிச்சி' இந்த படத்தில் பாலியலை முன்னிறுத்தும் வகையில் முருங்கை காயில் வீரியம் உள்ளதை போல் காண்பித்து, முருங்கைக்காய் விலையை சந்தையில் ஏற்றம் அடைய செய்தார். இதனாலேயே அவரது பெயர் பட்டி தொட்டி கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பரவியது. அதுமட்டுமல்லாமல் “இது நம்ம ஆளு” திரைப்படத்திற்குப் பாக்யராஜே இசை அமைத்து, ஒரு பாடலையும் பாடியிருந்தார்.

இப்படி இருக்க, கே.பாக்கியராஜ் இதுவரை சிகப்பு ரோஜாக்கள், விதி, அன்புள்ள ரஜினிகாந்த், நான் சிகப்பு மனிதன், சின்ன வீடு, வேட்டிய மடிச்சுகட்டு, சுயம்வரம், சொக்கத்தங்கம், சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், ரெண்டு, நினைத்தாலே இனிக்கும், உத்தமப் புத்திரன், சித்து +2, வாகை சூட வா, பாலக்காட்டு மாதவன், துணை முதல்வர், கணிதன், துப்பறிவாளன், ஆருத்ரா, பொன்மகள் வந்தாள், முந்தானை முடிச்சு, முருங்கைகாய் சிப்ஸ், சரக்கு, காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம், டாடா, பி.டி சார், எனை சுடும் பணி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகை தேவயானி நடித்துள்ள 'நிழற்குடை' படமானது மே மாதம் 9ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதற்கான இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குனரும் நடிகருமான கே.பாக்கியராஜ் மிகவும் வேடிக்கையாக பேசினார். அவர் பேசுகையில், " நான் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரை அடுத்து எனக்கு மூன்று பேரை மிகவும் பிடிக்கும். முதலில் நடிகை நமிதா, இரண்டாவது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சுக்கள், மூன்றாவது நடிகை தேவையானி. இவர்கள் மூவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

நமிதாவை எனக்கு பிடிக்க என் மகன் சாந்தனு தான் காரணம், ஏனெனில், இதேபோன்ற ஒரு நிகழ்ச்சிக்கு எனது மகனான சாந்தனுவை அழைத்து வந்தேன். அப்பொழுது அங்கு நடிகை நமிதா இருப்பதை பார்த்ததும் அவன் அவர்களிடம் சென்றான். அப்பொழுது இருவரும் பார்த்து கொண்ட அடுத்த நொடியே இறுக்கமாக கட்டி அணைத்தபடி ஹாய் ஹாய் என அன்பை பரிமாறிக்கொண்டனர்.
பின்பு தான் நான் அங்கு இருப்பது இருவருக்கும் நினைவுக்கு வந்தது. உடனே என்னை திரும்பி பார்த்தனர். நான் அவர்களையே பார்த்து கொண்டு இருக்க, இருவரும் திருட்டு முழியில் என்னை பார்த்து கொண்டு இருந்தனர். அடுத்த கணமே என் மகன் அங்கிருந்து எஸ்கேப் ஆகி ஓடிவிட்டான். இப்பொழுதும் இதே போன்ற மேடை நிகழ்ச்சிகளுக்கு வந்தால் எனக்கு அந்த நினைவு தான் முதலில் நினைவுக்கு வருகிறது.

இதனை அடுத்து தேவயானியை குறித்து பேசிய அவர், தேவயானி எப்பொழுது பார்த்தாலும் முகத்தில் அந்த அன்பை மட்டுமே வைத்துள்ளார். அது எப்படி என எனக்கும் புரியவில்லை, உண்மையிலேயே அவரது கணவர் கொடுத்து வைத்தவர் தான். இப்படி ஒரு அன்பான மனைவி கிடைக்க. அதுமட்டுமல்லாமல் தேவையானி நடித்துள்ள இந்த நிழற்குடை படம் கண்டிப்பாக வெற்றி அடையும் என நம்புகிறேன். என பேசி சென்றார்.
இதையும் படிங்க: ரஜினியை வழிமறித்த பூசாரி..! இறங்கி சாமி தரிசனம் செய்து சென்ற சூப்பர் ஸ்டார்..!