சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்குனர் நெல்சன் இயக்கிய திரைப்படமான "ஜெயிலர்" திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்தது. இப்படத்தில் படையாப்பா படத்தில் தனக்கு வில்லியாக இருந்த ரம்யாகிருஷ்ணனை திருமணம் செய்து அவரிடத்தில் சாதுவாக நடித்து, பின் தனது 'டைகர்' முகத்தை காண்பித்து படத்தில் கலக்கி இருப்பார்.
இப்படத்தில் அனிரூத் தனது இசையில் ரஜினியின் தீவிர ரசிகன் என்பதை காண்பித்து இருப்பார். அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் வெற்றிக்கு காரணமான சூப்பர் ஸ்டார், நெல்சன் திலீப்குமார், மற்றும் அனிரூத் ஆகியோருக்கு படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறான் விலையுயர்ந்த கார்களை பரிசாக கொடுத்திருந்தார்.

தற்பொழுது 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் ரஜினியின் கதாபாத்திரங்கள் சிறப்பாக இருப்பதாக யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலரும் கூறி வருவதால் இப்படத்தின் ட்ரெய்லருக்காக ரசிகர்கள் காத்து கொண்டு வருகின்றனர். இப்படி இருக்க, ஜெயிலர் 2 படத்தின் படபிடிப்பானது கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைப்பெற்று வந்தது. இந்த நிலையில், படப்பிடிப்பு முடிந்த கையோடு விமானம் மூலம் சென்னைக்கு வந்த நடிகர் ரஜினி காந்த்,
இதையும் படிங்க: நெல்சன் படத்தில் இணையும் பான் இந்தியா ஸ்டார்..! ரகசியத்தை உடைத்த பிரபல நடிகர்..!

காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பைசரன் பகுதியில், ஏப்ரல் 22 அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் குழு என்று கருதப்படும் தி ரெசிஸ்டண்ட் ஃபிரண்ட் (டிஆர்எஃப்) அமைப்பினர் பொறுப்பேற்று இருக்கின்றனர் என்ற தகவலை அறிந்து கோபத்தில் கொத்தித்து போய் வந்தார்.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், "அழகான காஷ்மீரின் அமைதியான சூழலை கெடுக்க அண்டை நாட்டு எதிரிகள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வீடியோ நெஞ்சை பதற செய்கிறது. ஆதலால் இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு கனவில் கூட யாரும் நினைக்காத கடுமையான தண்டனையை வழங்க வேண்டும். நீண்ட காலமாக காஷ்மீரில் அமைதி நிலவி வருவது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை. பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களை நம் ராணுவம் விரைந்து கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்க வேண்டும்.

பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கைகயை மத்திய அரசு எடுக்கும் தக்க தண்டனை கொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆனாலும் விரைவாக அதை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று ஆவேசமாக கூறிச்சென்றார்.

இப்படி செய்தியாளர்களிடம் பேசிவிட்டு விடு திரும்பிய ரஜினியை வழியில் மறித்த கோவில் பூசாரி ரஜினிகாந்த் உடல் நலமுடன் வாழ வேண்டும் என சிறப்பு பூஜை செய்ய, அவரும் பூசாரிக்கு கட்டுப்பட்டு காரில் இருந்து இறங்கி கடவுளை தரிசனம் செய்து அங்கிருந்து கிளம்பி சென்றார்.
இதையும் படிங்க: ரசிகருக்காக ரஜினி செய்த நெகிழ்ச்சி செயல்..! வெளிநாட்டிலும் குறையாத மாஸ்..!