"இழப்பதற்கு எதுவுமில்லை நமது கையிலே" என்ற பாடலை கேட்டால் நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும் ஒரே படம் "சாட்டை". இந்த படத்தில் நடிகர் சமுத்திரக்கனி முக்கிய கதாநாயகனான இருந்தாலும் அவருடன் முக்கிய கதாநாயகனாக பார்க்கப்பட்டவர் தான் நடிகர் யுவன். இந்த பாடத்தில் கீழ்படியாத பனிரெண்டாம் வகுப்பு மாணவனாக வந்து படிக்காமல் காதல், அடிதடி, சண்டை என சுற்றி திரிந்த இவரை நல்வழி படுத்தும் வகையில், சமுத்திரக்கனி பல முயற்சிகளை செய்வார்.
அவர் தனக்காக மேற்கொள்ளும் முயற்சிகளை பார்த்து நடிகர் யுவன் திருந்தி " மொத்த ஸ்கூலுமே எனக்கு எதிராக நிற்கும் பொழுது தயா சார் மட்டும் தான் எனக்காக நின்னாரு, அவருக்காக ஏதாவது பண்ணனும் என தோணுது படிக்கணும் என தோணுது " என சொல்லி நன்றாக படித்து நல்ல மதிப்பெண் எடுப்பார். இப்படிப்பட்ட அருமையான படம் தான் "சாட்டை". இந்த படத்தில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார் நடிகர் யுவன்.

இதுவரை பாசக்கார நண்பர்கள், சாட்டை, கீரிபுள்ள, காதலைத் தவிர வேறொன்றும் இல்லை, கம்மர்கட்டு, இளமி, அய்யனார் வீதி, விளையாட்டு ஆரம்பம், அடுத்த சாட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் நடிகர் யுவன். இப்படி இருக்க, 2019ம் ஆண்டு வரை வெளியான படங்களில் கதாநாயகியாக தோன்றிய யுவன், அதற்கு பின் எங்கேயும் பெரிதாக பார்க்க முடியவில்லை. அவரது நடிப்பில் எந்தவித படங்களும் வெளியாகவும் இல்லை என்பதால் எங்கே போனார் யுவன் என மக்கள் அதிகமாக கேட்க ஆரம்பித்தனர்.
இதையும் படிங்க: ரஜினியை வழிமறித்த பூசாரி..! இறங்கி சாமி தரிசனம் செய்து சென்ற சூப்பர் ஸ்டார்..!

இந்த சூழலில், தற்பொழுது யுவனின் பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அதன்படி, அவர் பேசுகையில், நான் தற்பொழுது சென்னையில் ஹோட்டல் ஒன்றை வைத்து நடத்தி வருகிறேன் என கூறினார். அப்பொழுது ஒரு வீடியோவை ஒளிபரப்பினர் அதில், நடிகர் யுவன் கடையில் பரோட்டா தட்டி போடுவதும் பின்பு கொத்து பரோட்டா போடுவதும் போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்று இருந்தது. இதனை அடுத்து மீண்டும் பேசிய யுவன், நான் இதுவரை 13 படங்களில் நடித்து இருக்கிறேன். ஆனால் தமிழ் சினிமாவில் யாரும் என்னை பெரிதளவில் கண்டுகொள்ளவில்லை.
சினிமாவில் லக் இருந்தால் மட்டும் தான் ஜெயிக்க முடியும் என்பது காலம் கடந்து தான் எனக்கு தெரியவந்தது. இந்த சூழலில், நான் நடித்த சாட்டை படம் ரொம்ப நல்ல படம் தான் ஆனால், அதனை அடுத்து நான் நடித்த ஒரு படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது. அதற்கான காரணம் இதுவரை எனக்கு தெரியவில்லை. நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பிறகு நான் நடித்த 'அடுத்த சாட்டை' படத்தின் மூலம் கம்பேக் கிடைக்கும் என்று நினைத்தேன் ஆனால் அதுவும் கை கூடவில்லை.

அந்த நேரத்தில் இயக்குநர் பாலா படத்தில் நடிக்ககூடிய வாய்ப்பு என்னை தேடி வந்தது. இதனை என்னால் நம்ப முடியவில்லை. இயக்குநர் பாலா படத்தில் நான் நடிப்பது வெளியே தெரிந்தால் கண்திருஷ்டி விழுந்து விடும் என வெளியே யாரிடமும் சொல்லாமல் மனதுக்குள் அடக்கி வைத்திருந்தேன். பிறகு ஒருநாள் என்னை பாலா சார் நேரில் அழைத்து படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தை பற்றி கூறி போட்டோஷூட் நடத்தினார். இந்த சூழலில், அவரே புரோமோஷனுக்காக போட்டோக்களை என்னை வைத்து எடுத்து வெளியிட்டதும் பலருக்கு ஆச்சர்யமாக இருந்தது.
இதனை அடுத்து, படப்பிடிப்புக்கான அறிவிப்பும் அடுத்த நாளே வெளியான நிலையில், படத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தேன். ஆனால், தீடீரென படப்பிடிப்பு டிராப் ஆனது. படப்பிடிப்பு நடத்தப்படுவதற்கு முன்பே நின்றதை நினைத்து வருந்துவதா அல்லது நல்ல வாய்ப்பு பறிபோனதை நினைத்து அழுவதா என தெரியாமல் திகைத்து போய் நின்றேன். ஏனெனில் படம் போனது பெரிதல்ல பாலா சார் படத்தில் நடிப்பதை பெரிதாக எண்ணி ரொம்ப நம்பினேன் அதுதான் மிகவும் வலித்தது.

உங்களுக்கு தெரியுமா, பாலா சாரின் இந்த படத்தில் நடிப்பதற்காக நான் என்ன உழைப்பை போட்டேன் என, படம் துவங்குவதற்கு முன்னர் அவர் என்னிடம் அப்படத்தின் கதாப்பாத்திரம் குறித்து சொன்னார். நான் அந்த படத்தில் ஓட்டலில் பரோட்டா போடும் பையனாக நடிக்க இருந்தேன். அதற்காகவே, நாக்பூர் சென்று பரோட்டா போட கற்றுக்கொண்டேன். உண்மையில் பாலா சார் படத்தில் இந்த கேரக்டரில் என்னை திரையில்,பார்க்க ஆசைப்பட்டேன். ஆனால் அது கைகூடவில்லை.

இன்று வரை அந்த படம் எதனால் எடுக்கப்படவில்லை என எனக்கே தெரியவில்லை. ஆனால் அடுத்த முறை இதே வாய்ப்பு எனக்கு கிடைத்தால் அதனை நான் விடுவதாகவும் இல்லை என வேதனையுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மீண்டும் ரவீனாவிற்கு ரெட் கார்டு..! தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி.. இத்தனை வருடம் நடிக்க தடையா..?