சிறப்பாக நடிக்கும் சிம்பு என்கின்ற சிலம்பரசன், சரியாக ஷூட்டிங்கிற்கு வரமாட்டார் எனவும் நேரத்தை கடைபிடிக்க மாட்டார் எனவும் சினிமா வட்டாரத்தில் பலராலும் பேசப்பட்டதால் சில காலங்கள் படவாய்ப்பு கிடைக்காமல் விரக்தியில் இருந்தார். பின், நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பின், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கொடுத்து இளைஞர்கள் மனதில் மீண்டும் இடம் பிடித்தார். பின் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தனது உடல் எடையை குறைத்து, மாநாடு படத்தில் மாஸ் காண்பித்தார்.

அந்த வகையில் பல தோல்விகளையும் வெற்றிகளையும் கணிசமாக தனது வாழ்க்கையில் பார்த்த சிம்பு, இதுவரை காதல் அழிவதில்லை, அலை, தம், குத்து, கோவில், மன்மதன், தொட்டி ஜெயா, வல்லவன், சரவணா, காளை, சிலம்பாட்டம், விண்ணைத்தாண்டி வருவாயா, கோவா, வானம், ஒஸ்தி, போடா போடி, கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலு, காக்கா முட்டை, அச்சம் என்பது மடமையடா, அன்பானவன் அசாராதவன் அடங்காதவன், காற்றின் மொழி, செக்கச்சிவந்த வானம், 90 ML, மாநாடு, ஈஸ்வரன், மஹா, பத்து தல, தக் லைஃப் போன்ற படங்களில் நடித்து உள்ளார்.
இதையும் படிங்க: இசையமைப்பாளர் தமன் கொடுத்த ஷாக் பரிசு...! சைலண்டாக வாங்கிய கயாடு லோஹர்...!

இதனை தொடர்ந்து, மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நடிகர் ஆர்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சந்தானம். இந்த படம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக உள்ள நிலையில், தற்பொழுது நடிகர் சிம்பு உடன் படம் நடிக்க உள்ளதாக சந்தானம் தெரிவித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வசூல் ராஜா MBBS திரைப்படத்தை போல், கமெர்ஷியல் கலந்த ஜாலி திரைப்படமாக உருவாகி வரும் STR49 படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

பத்து வருடங்கள் கழித்து இந்த படத்தில் நடிகர் சிம்புவுடன் சந்தானம் காமெடியனாக நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தான் நடிக்கும் இனிப்பு செய்தியை செய்தியாளர்கள் மத்தியில் கூறியுள்ளார் நடிகர் சந்தானம். அவர் கூறுகையில், நான் 'STR 49' திரைப்படத்தில் சிம்புவுடன் நடிக்கிறேன். காரணம், திடீரென ஒரு நாள் சிம்புவிடம் இருந்து எனக்கு கால் வந்தது. என்னவாக இருக்கும் என நினைத்து பேசியபோது, என்னுடைய அடுத்த திரைப்படத்தில் உங்களால் நடிக்க முடியுமா? என கேட்டார்.

என்னால் சிம்புவுக்கு மறுப்பு தெரிவிக்க முடியவில்லை. ஏனெனில் என் சினிமா பயணத்தின் தொடக்க காலத்தில் சிம்பு எனக்கு அதிகமான உதவிகளை செய்துள்ளார். நான் STR 49 படத்தில் நடிக்கும் அதே நேரத்தில் மற்றொரு படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தேன், ஆனால் இந்த படத்தில் நடிப்பதால் அதை நான் கொஞ்சம் ஒத்தி வைத்துள்ளேன். இதனால் அந்தப்பட தயாரிப்பாளரிடம் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். STR 49 படத்தில் எங்கள் இருவரின் காம்போ நீங்க நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மிக பிரம்மாதமாக இருக்கும்" என கூறினார்.

இந்த சூழலில், சிம்புவின் "STR 49" படத்தை குறித்ததான சிறந்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் சிம்புவின், "STR 49" படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற இனிப்பு செய்தி வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பானது வருகின்ற ஜூன் மாதம் முதல் தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே...! நீல நிற உடையில் கண்ணழகி கயாடு லோஹர்..!