தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா.

50 நிமிட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள , ரூ.5 கோடி... இவர் சம்பளம் வாங்கிய வெளியான தகவல் தான் சமூக வலைத்தளத்தில் காட்டு தீ போல் பரவி கடந்த 2 தினங்களாக பரவியது.

இதையும் படிங்க: ஓவர் பந்தா உடம்புக்கு ஆகாது... விமர்சனத்தை சந்தித்த விழாவில் நயன்தாரா எடுத்த போட்டோஸ்!
பொதுவாக ஹீரோயின்கள் 30 வயதை எட்டி விட்டாலே அவர்களுக்கான பட வாய்ப்புகள் குறைந்து விடும்.

ஆனால் இதுபோன்ற பல விதிமுறைகளை சில நடிகைகள் தகர்த்தெறிந்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர் நடிகை நயன்தாரா.

40 வயதை எட்டிய பின்னரும் தொடர்ந்து ஹீரோயினாகவே நடித்து வருவது மட்டும் இன்றி, ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் கொண்டாடப்படுகிறார்.

அதே போல் திருமணம் ஆகி... இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னரும் இவருக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் நடிகை நயன்தாரா, இந்த ஆண்டு பொங்கல் கொண்டாட்டத்தை செண்டிமெண்ட் டச்சுடன் கொண்டாடியுளளார்.

ஆம்... நயன்தாரா பிறப்பால் ஒரு கிறிஸ்தவர் என்றாலும், விக்கியை திருமணம் செய்து கொண்டபின்னர் தமிழ் பெண்ணாகவே ஒவ்வொரு பண்டிகை நாட்களையும் கொண்டாடுகிறார்.

அந்த வகையில் உழவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவும், சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை தன்னுடைய வீட்டில் டெரசில் பொங்கல் வைத்து நயன்தாரா பொண்டாடியுள்ளார். குறிப்பாக மஞ்சள் பிள்ளையார் பிடித்து, மிகவும் செண்டிமெண்ட் டச்சுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

இந்த பொங்கல் பண்டிகையை மேலும் சிறப்பிக்கும் விதமாக தன்னுடைய இரு மகன்களுக்கும், வேஷ்டி - சட்டை அணிவித்துள்ளார். அதே போல் விக்கியும் வேஷ்டி சட்டையில் இருக்க, நயன்தாரா வெள்ளை நிற சல்வார் அணிந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: வெளிநாட்டில் அரைகுறை உடையோடு குடும்பத்தோடு கும்மாளம் போடும் நயன்தாரா!