உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் சேர்க்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தது. அதை மீறி மத்திய அரசு சட்டம் இயற்றி, தலைமை நீதிபதியை நியமனக் குழுவில் இருந்து நீக்கி, மத்திய அமைச்சர் ஒருவரை நியமித்தது. இப்போது சிபிஐ இயக்குநரை நியமிக்கும் குழுவில் தலைமை நீதிபதி இடம் பெற்றுள்ளதையும் குடியரசுத் துணைத் தலைவர் மூலம் மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில் தேசிய ஜூடிசியல் அகாடெம சார்பில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தனகர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
எந்த ஜனநாயகத்திலாவது, நம்மைப் போன்ற தேசத்தில் சட்டப்பதவிகளில் இருப்பவர்கள் எவ்வாறு சிபிஐ இயக்குநர் நியமனத்தில் தலையிட முடியும். இதற்கு பின் ஏதேனும் சட்டமுன்வரைவு இருக்கிறதா. நிர்வாகத்தில் இருப்போர் நீதிமன்ற தீர்ப்புக்கு பணிந்து நடந்ததால்தான் சட்டப்பூர்வ பரிந்துரை வடிவம் பெற்றது.
இதையும் படிங்க: இலவசங்கள் வழங்குவதால் மக்கள் வேலைக்குச் செல்ல விரும்புவதில்லை - உச்ச நீதிமன்றம் கருத்து

ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது, ஜனநாயகத்தில் நிச்சயம் இது இணைக்க முடியாது. மிகப்பெரிய ஜனநாயக அமைப்பான இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டப் பதவிகளில் இருப்போர் அரசு நிர்வாகத்தில் தலையிட்ட்டால் அரசியலமைப்பில் குழப்பம், முரண்பாடு ஏற்படும், இதை நீண்டாகாலத்துக்கும் பொருத்திருக்க முடியாது. அரசியலமைப்பு நிறுவனங்கள் தங்கள் எல்லைகளை மறக்கும்போது, ஜனநாயகம் தனது ஆறாத ரணங்களால் நினைவுகூறப்படும். அரசியலமைப்புச் சட்டம் நல்லிணக்கம், ஒருங்கிணைந்த அணுகுமுறை ஆகியவை ஒத்திசைவாக இருக்க வேண்டும்.

ஒருங்கிணைப்பு இல்லாமல் அரசியலமைப்பு ஆலோசனை என்பது வெறும் அரசியலமைப்புச் சட்டம்தான். நீதிமன்ற தீர்ப்புகளின் மூலம்தான் நீதிமன்றம் தன்னுடைய இருப்பை வெளிப்படுத்த வேண்டும், வேறு எந்த வடிவத்திலும் செயல்படுவது அதன் நிறுவனத்தின் மாண்பைக் குலைத்துவிடும். நான் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக 1990களில் இருந்த போது, அரசியல்சாசன அமர்வில் 8 நீதிபதிகள்தான் இருந்தனர். எப்போதுமே இந்த 8 நீதிபதிகளும் ஒன்றாக அமர்ந்ததுமில்லை.

அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 145(3) இன் கீழ் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட அமரம்வு இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பை விளக்க அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது. விளக்கக்கூடியதை மட்டும்தான் நீங்கள் விளக்குகிறீர்கள். விளக்கம் என்ற போர்வையில், அதிகாரத்தின் ஆணவம் இருக்க முடியாது. இவ்வாறு ஜெகதீப் தனகர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சூடு பிடிக்கும் கவர்னர் வழக்கு.. 12 நறுக் கேள்வி கேட்ட நீதிமன்றம்..!