பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்லாமாபாத்தில் இருந்து டெல்லி வரை பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்படும் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறியதன் மூலம் பயங்கரவாதிகளின் தலைசிறந்த பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆகப்பெரும் மரண அடியைக் கொடுத்துள்ளது.
பாகிஸ்தானின் பெரும் தலைவர்களே இதனை பெரும் தண்டனை என ஒப்க் கொண்டு தலையில் அடித்துக் கொள்கிறார்கள். 1960 ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீற இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த முடிவு பாகிஸ்தானில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட சிந்து தாரக்கி பசந்த் கட்சித் தலைவர் டாக்டர் காதிர் மாக்சி, இது குறித்து, ''இந்த முடிவு பாகிஸ்தானில் உள்நாட்டுப் போருக்கு வழிவகுக்கும். மக்கள் ஒருவருக்கொருவர் தலைகளை உடைத்துக் கொள்வார்கள். பாகிஸ்தானுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும் வகையில், சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தாமல் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவின் பதிலடி...ஐசோலேஷனில் பாகிஸ்தான்...எச்சரிக்கும் வல்லுநர்!
பாகிஸ்தானின் இரண்டு பெரிய மாகாணங்களான சிந்து மற்றும் பஞ்சாப், ஏற்கனவே சிந்து நதியின் நீரில் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றன. மக்கள் தெருக்களில் போராடுகிறார்கள். இப்போது இந்த முடிவை எடுத்ததன் மூலம் இந்தியா பாகிஸ்தானை தோற்கடித்துள்ளது. தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்ளும் பாகிஸ்தான் மக்கள், இப்போது தங்கள் சொந்த மக்களிடையே சண்டையிடுவார்கள். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 12 கோடி மக்கள் தொகையும், சிந்து மாகாணத்தில் 5 கோடி மக்கள் தொகையும் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 180 பில்லியன் கன மீட்டர் நீர் சிந்து நதி வழியாகப் பாய்கிறது. இதில் 80 சதவீதம் பாகிஸ்தானால் பயன்படுத்தப்படுகிறது. இந்தியா 20 சதவீத தண்ணீரைப் பயன்படுத்துகிறது. இந்த நாட்களில் பாகிஸ்தானில் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. பாகிஸ்தானிடம் 30 நாட்களுக்குத் தேவையான தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. பஞ்சாப், சிந்து மாகாணங்கள் ஏற்கனவே தண்ணீர் பங்கீடு தொடர்பாக ஒருவருக்கொருவர் எதிராக போராடி வருகிறனர்.
பாகிஸ்தானில் 4.7 கோடி ஏக்கர் நிலம் சிந்து நதியின் நீரால் பாசனம் செய்யப்படுகிறது. பாகிஸ்தான் சிந்து நதி நீர் மூலம் மின்சாரத்தையும் உற்பத்தி செய்கிறது. இந்நிலையில், சிந்து நதி நீர் தடை செய்யப்பட்டால், பாகிஸ்தானில் பெரிய நெருக்கடி ஏற்படும்.

ஏற்கனவே கடனில் மூழ்கியுள்ள பாகிஸ்தானுக்கு, எதிர்காலப் பாதை எளிதாக இருக்கப் போவதில்லை. இதனால்தான் பாகிஸ்தானின் உயர்மட்டத் தலைவர்கள் இதை ஒரு கடுமையான அடி என்று கூறியுள்ளனர்.
2016, 2019 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் மீது இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியுள்ளது. 2016 ஆம் ஆண்டு நடந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில், இந்தியா 245 பாகிஸ்தான் பயங்கரவாதிகளைக் கொன்றது. 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில், இந்திய ராணுவம் 300க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளைக் கொன்றது.

இந்த முறையும் பஹல்காமிற்குப் பிறகு சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றிய பேச்சு இருந்தது. மறுபுறம், பயங்கரவாதிகளுக்குக் கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பிரதமர் மோடி பயங்கரவாதிகளை ஒழிப்பது பற்றிப் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: பதவி வெறிக்காக பஹல்காம் தாக்குதல்: மூளையாக செயல்பட்டவரை அம்பலப்படுத்திய பாக்., பத்திரிகையாளர்!