நெல்லை வண்ணார்பேட்டையில் தமிழ் மக்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழர் அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய, தமிழர் சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், கச்சத்தீவை மீட்பது தொடர்பான எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எந்த அரசியல் கட்சியும், அரசும் எடுக்கவில்லை. கச்சத்தீவு பிரச்சினையில் உயிரிழப்பவர்கள் மீனவர்கள் என்பதாலேயே யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. கடந்த நான்கு வருடங்களாக கச்சத்தீவு குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தாத தமிழக அரசு, தேர்தல் நெருங்குவதால் இப்போது சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

தேர்தல் நேர வியூகமாகவே கச்சத்தீவு பயன்படுத்தப்படுகிறது. திமுக மத்திய அமைச்சரவையில் இருந்தபோது கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுத்திருக்கலாம், ஆனால் அவர்கள் செய்யவில்லை என்றும், பாஜக அரசும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கச்சத்தீவு விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவும், இலங்கையும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
தனி சட்டம் இயற்ற வேண்டும். மகளிர் உரிமைத்தொகை என்ற பெயரில் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு, மதுபான கடைகள் மூலம் ஒவ்வொரு வீட்டு பெண்களிடம் இருந்தும் 15 ஆயிரம் ரூபாயை அரசு பறித்துக்கொள்கிறது.
இதையும் படிங்க: அண்ணாமலை முன்பு பிரதமர் மோடியை சுட்டிகாட்டிய சீமான்.. என்ன சொன்னாரு தெரியுமா?

அரசியல் பாகுபாடு இன்றி அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழகத்திற்கு தரவேண்டிய அனைத்து நிதிகளையும் மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இங்கு உட்கார்ந்து படிக்கவே இடம் இல்லாதபோது மும்மொழி கொள்கை அவசியமா? இது வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழகத்தின் அரசியல் கணிக்க முடியாத ஒன்று. எப்போது யாருடன் கூட்டணியில் இருக்கிறார்கள். எப்போது யாரிடமிருந்து வெளியே வருவார்கள் என்பதை அறிய தேர்தல் வரை காத்துக் கொண்டே தான் இருக்க வேண்டும். இப்போது கூட்டணி என சொல்லலாம்.

பிறகு மறுக்கலாம். எனது அடுத்த கட்ட முடிவை விரைவில் அறிவிக்கப்படும். மக்களுக்காக மக்கள் நலன் சார்ந்து எனது முடிவு இருக்கும். அமைச்சர் பொன்முடியின் பேச்சு தெரியாமல் நடந்த சம்பவம் போன்று இல்லை. பெண்கள் மீது அருவருக்கத்தக்க சிந்தனை கொண்ட அவரை போன்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
பெண்கள் மீது அருவருக்கத்தக்க சிந்தனை கொண்ட அமைச்சரை போன்ற ஆட்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். மக்கள் தேர்ந்தெடுத்து அமைச்சரவையில் இருக்கும் ஒருவர் இது போன்ற சிந்தனையோடு பேசுவது சரியல்ல. அவரது பேச்சு தெரியாமல் நடந்த சம்பவம் போல் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சினிமாவில் நடிச்சா அரசியலுக்கு வந்துவிடுவதா.? மதுரை ஆதினத்துக்கு வந்த கோபம்.!!