தீவிரவாதிகளுக்கும் பின்னால் இருப்பவர்களுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் பஹல்காம் தாக்குதல் குறித்து ஆவேசமாக கூறி இருக்கிறார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பு, இந்தக் கொடூர செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதால், பாகிஸ்தான் மீது பல்வேறு தடை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.

இதன்படி, சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, இந்தியா - பாகிஸ்தான் எல்லையான அட்டாரி - வாகா சோதனைச் சாவடி மூடல் முதலான முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது. மேலும் எல்லையில் இரு நாட்டு ராணுவமும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றமும் நிலவுகிறது. இந்நிலையில் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "இந்தத் தீவிரவாத செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. காஷ்மீரில் அமைதி திரும்பி இருப்பது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை. அதை எப்படியாவது கெடுக்க வேண்டும் என இப்படி எல்லாம் செய்கிறார்கள். கண்டிப்பாக அதை செய்தவர்களுக்கும், அதன் பின்னால் இருப்பவர்களுக்கும், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம், கண்டுபிடித்து கடுமையான ஒரு தண்டனை கொடுக்க வேண்டும். மறுபடியும் அப்படி செய்ய வேண்டும் என அவர்கள் கனவிலும் எதிர்பார்க்க கூடாது. அப்படி செய்வார்கள் என நம்பிக்கை இருக்கிறது" என ரஜினி ஆவேசமாக கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க: எதுக்குடா காஷ்மீர் இந்தியாவுடன் இருக்கணும்..? சுந்தரவல்லி லிஸ்டில் பியூஸ் மானுஷ் வெறித்தனம்..!
இதையும் படிங்க: மாஸ் என்ட்ரி.. அரபிக்கடலில் விக்ராந்த் போர்க்கப்பல்.. பதற்றத்தில் பாகிஸ்தான்..!