காஷ்மீரின் பஹல்காமுக்கு சுற்றுலா சென்ற அப்பாவி மக்கள் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டு கொன்ற சம்பவம் நாட்டையே கொந்தளிக்க வைத்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. அதேவேளையில் இந்தியாவை மீண்டும் தாக்கும் நோக்கத்தில் பாகிஸ்தான் எல்லையில் வீரர்களை குவிக்கிறது. இந்தியாவும் வீரர்களை குவித்த நிலையில் இன்று காலையில் இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது.
மேலும் இந்தியா-பாகிஸ்தான் இடையே உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது. எந்த நேரமும் போர் வெடிக்கும் அபாயமும் நிலவி வருகிறது. இவ்வளவு பதற்றத்துக்கு நடுவில், இந்தியாவை மிரட்டும் வகையில் கராச்சியில் இருந்து அரபிக்கடல் பகுதியில் ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் நடத்தி வருகிறது.சுமார் 480 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் சக்தி கொண்டது அந்த ஏவுகணை.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதே அரபிக்கடலில் இந்தியாவும், இஸ்ரேலும் சேர்ந்து தயாரித்த இடைமறிப்பு ஏவுகணையை ஐஎன்எஸ் சூரத் கப்பலில் இருந்து நம் கடற்படை சோதனை செய்து மிரட்டியது. இதற்கிடையே இன்று காலை எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் வீரர்கள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது.
இந்திய நிலைகளை குறி வைத்து பல இடங்களில் பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு உரிய பதிலடியை இந்தியா கொடுத்தது.இப்படி அடுத்தடுத்து பதற்றம் நிலவும் நிலையில், பாகிஸ்தானை கதறவிடும் மிகப்பெரிய சம்பவம் ஒன்றை இந்தியா செய்துள்ளது.
இதையும் படிங்க: இந்தியா வந்திறங்கிய அமெரிக்கா- இஸ்ரேல் விமானப்படை... வாயை மூடிய சீனா... பரிதாபத்தில் பாகிஸ்தான்..!

அதாவது, நம் நாட்டிலேயே தயாரித்த சக்தி வாய்ந்த ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலை, பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்தும் அதே அரபிக்கடலில் நிலை நிறுத்தி அதிரடி காட்டி இருக்கிறது.பஹல்காம் தாக்குதல் மற்றும் கராச்சியில் உள்ள அரபிக்கடலில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்தியது உள்ளிட்டவற்றை தொடர்ந்து ஐஎன்எஸ் விக்ராந்த் அரபிக்கடலை நோக்கி விரைந்தது. தற்போது கர்நாடகா கடல் பகுதியை ஒட்டிய அரபிக்கடலில் விக்ராந்த் போர் கப்பல் ரோந்து சுற்றி வருகிறது.

அரபிக்கடலில் விக்ராந்த் கப்பல் நிலைநிறுத்தப்பட்டு இருப்பது சாதாரண விஷயம் அல்ல. இது பாகிஸ்தானுடனான போர் பதற்றத்தை அதிகரிக்கச் செய்யும் செயல்.அரபிக்கடலில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் விக்ராந்த் கப்பலை வைத்து எளிதில் பாகிஸ்தானை பந்தாட முடியும். இந்தியாவின் இந்த அதிரடி ஆக்ஷன் பாகிஸ்தானை வியர்க்க, விறுவிறுக்க வைத்து இருக்கிறது.காரணம், விக்ராந்த் விமானம் தாங்கி போர் கப்பலின் பவர். ஐஎன்எஸ் விக்ராந்த் இந்திய கடற்படையின் மிகவும் வலிமையான போர்க்கப்பலாகும்.
இந்த போர்க்கப்பல் என்பது கடந்த 2022ம் ஆண்டில் நம் கடற்படையுடன் சேர்க்கப்பட்டது. இந்த கப்பல் தான் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலாகும். இது ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல்களாகும். ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் ஒரே நேரத்தில் 30 போர்விமானங்கள் வரை நிறுத்த முடியும். குறிப்பாக மிக்-29கே ரக போர் விமானங்கள் 26, காமோவ்-31 ரக போர் விமானங்கள் 4 மற்றும் 6 ஹெலிகாப்டர்களை நிறுத்தி வைக்கலாம்.

20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த கப்பலை நம் அரசு கட்டியது. 2009ல் ஆரம்பித்த கப்பல் கட்டும் வேலை, 2021ல் முடிந்தது. 2022ம் ஆண்டில் விக்ராந்த் போர் கப்பல் நம் கடற்படையுடன் இணைக்கப்பட்டது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளுக்கு பிறகு சொந்த நாட்டில் விமானம் தாங்கி போர் கப்பலை தயாரித்த பெருமை இந்தியாவுக்கு கிடைத்தது. இந்த போர் கப்பல் 262 மீட்டர் நீளம் உடையது.
இதன் அகலம் 62 மீட்டர், உயரம் 59 மீட்டர். ஒரே நேரத்தில் 1700 வீரர்களை சுமந்து செல்லும். வீரர், வீராங்கனைகள் தங்குவதற்கு தனித்தனி அறைகள் உள்ளன.தங்கும் அறைகள், ஆயுத அறைகள், கட்டுப்பாட்டு மையங்கள், இதர அறைகள் என மொத்தம் 2,300 அறைகள் உள்ளன. வீரர்கள் காயம் அடைந்தால் கப்பலிலேயே சிகிச்சை அளிக்க மருத்துவமனையும் உள்ளது.

விக்ராந்த் போர் விமானம் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 13,890 கிலோ மீட்டர் இடை நிற்காமல் செல்லும் வல்லமை கொண்டது. அரபிக்கடலில் இருந்து போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தானை டார்கெட் செய்வது மிகவும் சுலபம்.எனவே தான் விக்ராந்த் விமானம் தாங்கி போர் கப்பலை பார்த்து பாகிஸ்தான் பதைபதைக்கிறது.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்: ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு விஷமத்தனம்..! அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கண்டிப்பு..!