காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த பயங்கரவாத தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் மீது பல்வேறு தடை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிற உயர் அதிகாரிகள் பங்கேற்ற பாதுகாப்பு அமைச்சரவைக் குழு (சிசிஎஸ்) கூட்டத்தில் 7 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன. அதன்படி, 1960 ஆம் ஆண்டின் சிந்து நதி நீர் ஒப்பந்தம் உடனடியாக கைவிடப்படும்.

பாகிஸ்தான் - இந்தியா இடையிலான ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியான அட்டாரி பார்டர் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது, சார்க் விசா விலக்கு திட்டத்தின் (SVES) கீழ் பாகிஸ்தானியர்கள் பலர் விசா பெற்று இந்தியாவிற்கு பயணம் செய்திருந்த நிலையில் இனி அப்படி அவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதோடு பாகிஸ்தானியர்களுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட SVES விசாக்களும் ரத்து செய்யப்படுகிறது, டெல்லி உள்ள பாகிஸ்தான் உயர் கமிஷனில் உள்ள பாதுகாப்பு, இராணுவம், கடற்படை மற்றும் விமான படை ஆலோசகர்கள் "தனிநபர் அல்லாதவர்" என்று அறிவிக்கப்படுகிறார்கள்.
இதன் அர்த்தம், இத்தனை காலம் அவர்கள் தூதரக பணிகள் அடிப்படையில் இங்கே இருந்தனர். இனி அந்த அனுமதி அவர்களுக்கு கிடையாது. தனியாக இனி விசாவும் வழங்கப்படாது. இதனால் அவர்கள் உடனே வெளியேற வேண்டும். அதேபோல் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் கமிஷனில் இருந்து இந்தியா தனது பாதுகாப்பு / கடற்படை / விமானப் படை ஆலோசகர்களை திரும்பப் பெறுகிறது. அந்த பதவிகள் ரத்து செய்யப்பட்டதாகக் அறிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் அமித்ஷா ஆலோசனை.. அதிரடியாக பறந்த உத்தரவு!!

பாகிஸ்தான் உயர் கமிஷனில் பணியாற்றுபவர்களின் ஒட்டுமொத்த பலம் தற்போதுள்ள 55 இலிருந்து 30 ஆகக் குறைக்கப்படும், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் வெளியேற்றம். மூன்று மூத்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளை வெளியேற்றி இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. பாகிஸ்தான் தனது தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையை கிட்டத்தட்ட 45% குறைக்க வேண்டும் என்று இந்தியா உத்தரவிட்டு உள்ளது, வாகாவில் நடக்கும் எல்லை கொண்டாட்ட நிகழ்வுகள், தினசரி நிகழ்ச்சிகள் அடியோடு குறைக்கப்பட்டு உள்ளது.
இந்தியா இனி இது போன்ற அடையாள நட்பு சடங்குகளில் ஈடுபடாது என்று BSF உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியா மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம் மட்டுமின்றி ராணுவ நடவடிக்கைகள் மூலமும் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்தியாவின் பெருமை மற்றும் ராணுவ பலத்தின் அடையாளமான ஐஎன்எஸ் விக்ராந்த் இப்போது அரபிக்கடலில் ரோந்து செல்கிறது.

அதாவது பாகிஸ்தான் அருகே கடலில் ரோந்து செல்கிறது . மத்தியப் பகுதியில் நடைபெற்று வரும் அக்ரமன் ராணுவப் பயிற்சி என்று அழைக்கப்படும் The Akraman military exercise இந்திய எதற்கும் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்கிறது. ஐஎன்எஸ் சூரத்தில் இருந்து நிலப்பரப்பில் இருந்து வானத்தில் தாக்குதல்களை நடத்தும் Surface-to-Air Missile (MRSAM) சோதனைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு பாகிஸ்தானுக்கு அதிர்சியை கொடுத்து உள்ளது. அதோடு ராணுவம் நடத்திய என்கவுண்டரில் லஷ்கர் கமாண்டர் ஒருவர் கொல்லப்பட்டார். அவரின் இல்லங்கள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டன.
உள்ளூரில் இருந்து கொண்டு தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி வந்த அடில் தோக்கர், ஆசிப் ஷேக் ஆகியோரின் வீடுகள் இடிக்கப்பட்டு உள்ளன. தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகள் அலி பாய் மற்றும் ஹஷிம் மூசா ஆகியோரின் ஓவியங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர்களை பற்றிய தகவல்களை தருபவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. இத நிலையில் பயங்கரவாதத்தை பழிக்கு பழி வாங்குவோம் என்றும் இந்தியர்களின் ஒவ்வொரு உயிருக்கும் பாகிஸ்தான் விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்றும் இந்தியா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தான் சதி.. காஷ்மீரில் கணவனை இழந்த பெண் கண்ணீர்..!