கட்சியின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து துரை வைகோ விலகுவதாக நேற்று திடீரென அறிவித்திருந்தார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கட்சிக்கு ஒருவர் களங்கம் விளைவிப்பதாக பகிரங்கமாக அறிவித்தார். உட்கட்சி பூசலால் பதவி விலகுவதாக அறிவித்த துரை வைகோவின் முடிவால் அதிர்ச்சி அடைந்த வைகோ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், துரை வைகோவை சமாதானப்படுத்த முயற்சித்தனர். இந்த நிலையில் நிர்வாகக்குழு கூட்டம் கூடியதும் துரை வைகோ கட்சி பதவியில் தொடர வேண்டும் என மதிமுக நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்தனர்.

பெரும்பாலான நிர்வாகிகள் துரை வைகோவின் விலகலை ஏற்காமல் இருந்தனர். மொத்தம் 60 மாவட்டச் செயலாளர்கள் உள்ள நிலையில், 40 மாவட்ட நிர்வாகிகள் துரை வைகோவிற்கு ஆதரவாக பேசி இருந்தனர். இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அறிவுறுத்தலின் பேரில் தனது ராஜினாமா முடிவை துரை வைகோ வாபஸ் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: ராஜினாமாவை திரும்ப பெறுகிறார் துரை வைகோ.. சமாதனம் ஆனதன் ரகசியம் இதுதான்..!
இதையும் படிங்க: சேனாதிபதி என விசுவாசம் காட்டிய அந்த 'ஒருவர்'..! விளாசிய துரை வைகோ..!