காஷ்மீரின் பஹல்காம் மண்டலத்தில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் சிலர் சுற்றுலாப் பயணிகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவத்தின் முக்கியத்துவம் அறியாமல் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் புகழ்பெற்ற நாளேடான “தி நியூயார்க் டைம்ஸ்” “காஷ்மீரில் குறைந்தபட்சம் 24 சுற்றுலாப் பயணிகள் மிலிடன்ட்களால் (போராளிகள்) சுட்டுக்கொலை” என்று செய்தி வெளியிட்டிருந்தது.
இதையும் படிங்க: 'துப்பாக்கியுடன் மிரட்டிய 15 வயது சிறுவர்கள்'.. உயிர் பிழைத்தவர் கண்ணீர் பேட்டி..!
ஆனால், இந்த செய்திக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் எம்.பி.க்கள் குழுவினர் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர். அதில் “இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் தேசத்தில், நடந்த அப்பாவி மக்களுக்கு எதிரான மோசமான துப்பாக்கிச்சூடு தாக்குதல். பல ஆண்டுகளாக இந்த தாக்குதல் நடந்து வருகிறது, இதை சாதாரணமா “மிலிட்டன்ட் “என்று எளிமையாக எழுதியுள்ளீர்கள், டெரரிஸ்ட் (தீவிரவாதிகள், பயங்கரவாதிகள்) என்று குறிப்பிடுங்கள். இதற்கு காரணமானவர்கள் நீதியின் முன் கொண்டு வரப்பட வேண்டும். இந்தியாவாக இருந்தாலும் இஸ்ரேலாக இருந்தாலும் சரி தீவிரவாதம் என்றால் தீவிரவாதம்தான் நியூயார்க் டைம்ஸ் நிதர்சனத்திலிருந்து விலகிவிட்டது” எனத் தெரிவித்தனர்.

அது மட்டுமல்லாமல் நியூயார்க் டைம்ஸ் நாளேட்டின் செய்தியில் மிலிட்டன்ட் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, டெரரிஸ்ட் என்று பெரிதாக சிவப்பு எழுத்தில் அமெரிக்க வெளியுறவு குழுவினர் எழுதியுள்ளனர். உண்மையில் ஆங்கிலத்தில் டெரரிஸ்ட்(terrorist) என்ற வார்த்தைக்கும், மிலிட்டன்ட் (militant) என்ற வார்த்தைக்கும் வேறுபாடு இருக்கிறது. இரு வார்த்தைக்கும் மேலோட்டமாகப் பார்த்தால் ஒரே மாதிரி அர்த்தமாகத்தான் தெரியும் ஆனால், இரு வார்த்தைக்கும் ஆழமான வேறுபாடு இருக்கிறது.
இந்திய அரசின் யுஏபிஏ சட்டத்தின்படி “டெரரிஸ்ட்” என்பவர் “தேசத்தின் ஒற்றுமை, இறையாண்மை, பாதுகாப்பு, ஒருமைப்பாடு, பொருளாதார பாதுகாப்பு, ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் செயல்பட்டாலோ அல்லது மக்கள் மீது தாக்குதல் நடத்தினாலோ, இந்தியாவில் எந்தப்பகுதி மக்கள் மீதும் தாக்குதல் நடத்தினாலோ, எந்த தேசத்தின் மீதும் தாக்குதல் நடத்தினாலோ அவர் தீவிரவாதி”.

ஆனால் மிலிட்டென்ட் என்பது பொதுவான வார்த்தை. எந்த நபரும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக, அரசியல், சமூக காரணத்துக்காக தீவிர வன்முறையில் ஈடுபடுவது மிலிட்டென்ட். தீவிரமான சூழலை ஏற்படுத்துதல், அச்சத்தை உருவாக்குதல், மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி இலக்கை அடைய முயற்சித்தல் மிலிட்டென்ட்” என்பதாகும்.
ஆதலால் இந்தியாவில் காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தீவிரவாத தாக்குதல் என்று நியூயார்க் டைம்ஸ் நாளேட்டுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்: மதிய உணவால் தப்பித்த கேரள குடும்பத்தினர்: பரபரப்பு தகவல்கள்..!