ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்கெனவே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்த நிலையில் நானே நிறுவனர், நானே தலைவர் என ராமதாஸ் அறிவிக்க அன்புமணியின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தனது மகன் அன்புமணியிடம் இருந்த தலைவர் பதவியை பறித்து, அவரை அதிகாரம் இல்லாத செயல் தலைவராக ராமதாஸ் நியமித்தார்.

தைலாபுரம் தோட்டத்தில் பேசிய ராமதாஸ், பா.ம.க., நிறுவனராகிய நான், இனி தலைவர் பொறுப்பையும் எடுத்துக் கொள்கிறேன் என்றும் பா.ம.க., தலைவராக இருக்கும் அன்புமணியை, கட்சியின் செயல் தலைவராக நியமனம் செய்வதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து ராமதாஸ் உடன் அவரது மகள்கள் காந்திமதி, கவிதா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையும் படிங்க: முடிவுக்கு வந்ததா அப்பா - மகன் பிரச்சனை..? நானே பாமக தலைவர்.. தூள் கிளப்பிய அன்புமணி..!

ஆனால் மருத்துவர் அய்யா அவர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாமகவை தொடர்ந்து வழி நடத்திச் செல்வேன் என அன்புமணி பரபரப்பு அறிக்கை வெளியிட்டார். கொள்கை விதிகளின் படி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரை கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய முடியும் என்றும் இதனை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன் எனவும் தெரிவித்தார்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், பொதுக்குழு கூட்டத்துக்கு ராமதாஸ் ஏற்பாடு செய்துள்ளார். செயல் தலைவராக அறிவிக்கப்பட்ட அன்புமணி சென்னையில் இருக்கும் நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் இன்று பொதுக்குழு கூடுகிறது. பாமகவின் அவசர பொதுக்குழு கூட்டம், ராமதாஸ் தலைமையில் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: அவர் முகத்துல கூட முழிக்கமாட்டேன்... அப்பாவை சந்திக்க மறுக்கும் மகன்; பாமகவில் உச்சக்கட்ட மோதல்!