கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் ஜோமோன். ஆசிரியராக பணியாற்றி கொண்டிருந்த இவர் குருப்பந்தரை என்ற இடத்தில் பாராமெடிக்கல் கல்வி நிறுவனம் நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தில் கொச்சியை சேர்ந்த ஒரு மாணவி படித்து வந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு அந்த கொச்சி மாணவி, ஜோமோன் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக காவல்துறையினரிடம் புகார் அளித்தார். போலீசாரும் சற்றும் விசாரிக்காமல் மாணவி கூறியதை கேட்டு ஜோமோனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பாலியல் புகாரில் ஜோமோன் சிக்கியதால் அவரது நிறுவனம் நிரந்தரமாக மூடப்பட்டது. இதனால் அவர் ஏழ்மைக்கு தள்ளப்பட்டார். இதையடுத்து அவரது குடும்பத்தினரும் அவரை விட்டு சென்றனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த ஜோமோன் எவ்வளவோ கூறியும் அவரது குடும்பத்தினர் அவரை ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தை பிரிந்த ஜோமோன், தனிமையில் வாழ்ந்து வந்தார். இதைத்தொடர்ந்து அவர் மாற்று வேலை செய்து ஏழ்மை நிலையில் வாழ்க்கையை கழித்து வந்தார். இதற்கிடையே ஜோமோன் மீது புகார் அளித்த மாணவிக்கு திருமணமானது.
இதையும் படிங்க: கள்ளக்காதலால் நேர்ந்த சோகம்... பெங்களூரில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!

அவர் தனது கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் ஜோமோனில் நிலை குறித்து தெரியவந்தது. இதனால் மனவேதனை அடைந்த அந்த மாணவி, ஜோமோனின் குடும்ப தேவாலயத்திற்கு கணவருடன் சென்று திருப்பலிக்கு இடையே ஆசிரியர் ஜோமோன் மற்றும் உறவினர்களிடம் மன்னிப்பு கேட்டார். அப்போது அந்த மாணவி, மற்றவர்களின் தூண்டுதலின்பேரில் பொய் புகார் கூறியதாகவும், ஆசிரியர் ஜோமோன் நிரபராதி என்றும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

அத்துடன் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் ஆஜராகி ஜோமோன் மீது சிலரின் தூண்டுதலால் பொய் புகார் கொடுத்ததாக வாக்குமூலம் கொடுத்து மன்னிப்பு கேட்டார். அத்துடன் தனது புகாரையும் வாபஸ் பெற்றார். இதைதொடர்ந்து ஜோமோனை இந்த வழக்கில் இருந்து கோர்ட்டு விடுவித்தது. இதுகுறித்து ஆசிரியர் ஜோமோன் கூறுகையில், 'என் மீதான பாலியல் புகாரில் நான் நிரபராதி என விடுவிக்கப்பட்டுள்ளேன். இதனை அறிந்ததும் என்னுடைய குடும்பத்தினரும் என்னை ஏற்றுக் கொண்டனர்' என்று கூறினார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பேசு பொருளாக இருக்கிறது.
இதையும் படிங்க: நூலிழையில் தப்பித்தார் கும்பமேளா மோனலிசா... இயக்குநர் கைது... எந்த வழக்கில் தெரியுமா?