காஷ்மீர் பஹல்கம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது.
காஷ்மீர் பஹல்கமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையை இந்தியா தொடங்கியுள்ளது. இந்தச் சம்பவத்தில் பாகிஸ்தானுக்குத் தொடர்பில்லை என்று அந்நாடு அறிவித்தாலும், இச்சம்பவத்தில் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிழல் அமைப்புதான் நடத்தியுள்ளது. எனவே, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது.

இதன்படி பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தம், அட்டாரி-வாகா எல்லை மூடல், பாகிஸ்தான் நாட்டினர் விசா இல்லாமல் இந்தியா வர முடியாது. தூதரக செயல்பாடுகள் முடக்கம் என பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கேபினட் கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை வெளியுறவுத் துறை அறிக்கையாக வெளியிட்டது.

மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டமும் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் பங்கேற்கிறார்கள். இக்கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகள் பங்கேற்கும் என்று தெரிகிறது. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளன. இக்கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக மேலும் நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கவும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பாகிஸ்தானியர்களைவிட மோசம்...தமிழகத்தில் கேவலமான வெறுப்பு அரசியல்... பழிபோடும் விமர்சனம்
இதையும் படிங்க: இந்தியா நம்மைத் தாக்கப்போகுது... கலக்கத்தில் துடிதுடிக்கும் பாகிஸ்தான் மக்கள்..!