பாஜகவை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள், தங்களது அரசியல் ஆதாயத்திற்காக பஹல்காம் தாக்குதல் விவகாரத்தை பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில்... பாஜக மீதான வெறுப்பு அரசியல் குற்றச்சாட்டுகள், இந்தியாவின் சிக்கலான சமூக, அரசியல் கட்டமைப்பில் வேரூன்றியுள்ளன. இந்துத்துவக் கொள்கைகள், மதவெறுப்பு பேச்சுகள், மற்றும் சமூகப் பிரிவினைகளைப் பயன்படுத்துவது ஆகியவை பாஜகவின் எதிரிகளால் முக்கிய விமர்சனங்களாக முன்வைக்கப்படுகின்றன.

பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 27 பேர் மரணமடைந்தனர். இதற்கு நாடே வருத்தம் தெரிவித்து வருகிறது. தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொந்தளித்து வருகின்றனர். உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்தியாவுக்கு உறுதுணையாக இருப்போம் என உறுதியளிக்கின்றன. ஆனால், இந்தியாவுக்குள் இருக்கும் தமிழ்நாட்டில் உள்ள சில கட்சியினரும், ஆதரவாளர்களும், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருவது, அவர்களை பாகிஸ்தான் பிரிவினைவதிகளை விட மோசமானவர்களாக உணர வைக்கிறது.
இதையும் படிங்க: இந்தியா நம்மைத் தாக்கப்போகுது... கலக்கத்தில் துடிதுடிக்கும் பாகிஸ்தான் மக்கள்..!
பஹல்காம் தாக்குதலில் அமித் ஷாவை பதவி விலகக் கோரி சமூக வலைதளங்களில் வெறுப்பை உமிழ்ந்து வருகின்றன. ''பொதுவாக தீவிரவாத போர்வையில் அப்பாவி ஹிந்து சகோதரர்களை கொன்று முஸ்லிம்கள் மீது பழியை போடுவது தானே வழக்கம். இது என்ன புது டிரெண்டாக இருக்கிறது? மோடி ஜி, அமித் ஷா ஜிதான் கண்டுபிடிக்க வேண்டும் ஏன் அவர்கள் தானே... படித்தவர்களுக்கு புரிஞ்சா சரிதான். அமித் ஷா ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? தயவுசெய்து விளக்குங்கள்.

மறந்துவிட்டீர்களா? இப்போது ஒரு உள்ளூர் அரசாங்கம் உள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு ஒரு முதல்வர் இருக்கிறார். இந்தியத் அரசியல் அமைப்பு சட்டம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? சட்டம் & ஒழுங்கு, ஒரு மாநிலப் பொறுப்பு. பஹல்காம் படுகொலைகளுக்கு தார்மீக பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலகுவாரா? குறைந்தபட்சம் அஜித் தோவலாவது வீட்டுக்கு அனுப்பப்படுவாரா?
ஒன்றிய அரசு 2019 ல் தீவிரவாதத்தை ஒழித்திட காஷ்மீர் மாநிலத்தை பிரித்ததாக கூறியது. அதன் மாநில அந்தஸ்த்து மற்றும் காஷ்மீருக்கு இருந்த சிறப்பு அந்தஸ்த்து உள்ளிட்டவை பறிக்கப்பட்டன. 6 வருடங்களுக்கு பின்பும் அப்பாவிகள் கொல்லப்படுவது அங்கு தொடர்கிறது . அமித் ஷா பதவி விலக வேண்டும்'' என ஒரு கட்சிக்கு ஆதரவானவர்கள் விஷத்தைக் கக்கி வருகின்றனர்.

திமுக ஆதரவாளர் சுந்தரவல்லி தனது எக்ஸ்தளப்பதிவில், ''நாடகத்தை போடும் மோடி அமித்ஷா மோர்பி பாலத்தில் 141 பேர் இறந்தபோது வராத, புல்வாமாவில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட போது வராத, வெள்ளத்தில் தமிழ்நாட்டைக் காணவராத, பற்றி எரியும் மணிப்பூருக்கு வராத மோடியும், அமித்ஷாவும் பதறுவதும், உடனடியாக ஜம்மு-காஷ்மீர் போவதும் சந்தேகத்தை உண்டாக்குகிறது. இதுவும் தேர்தல் வியூகமோ?'' என உள்துறை அமைச்சர் மீதே பழியைப்போடுகிறார். அவர்கள் அறிவு அவ்வளவே என்று வைத்துக் கொள்வோம்.
சட்டம் படித்த, ஒரு கட்சிக்கு தலைவராக, மக்களால் தேர்தெடுக்கப்பட்ட எம்.பி.,யாக இருக்கக்கூடிய, தன்னை தானைத் தலைவன் என்று சொல்லி பெருமை பேசி வரும் திருமாவளவன், ''காஷ்மீர் தாக்குதல் விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும். உளவுத்துறை தோல்வி அடைந்திருக்கிறது என்பதையே இந்த தாக்குதல் காட்டுகிறது. அங்கு பயங்கரவாதமே இல்லை.

சுற்றுலாப் பயணிகள் சுதந்திரமாகப் பயணிக்கலாம் என்ற பா.ஜ.க. அரசின் கூற்றை நம்பிச் சென்றவர்கள் இன்று படுகொலையாகி உள்ளனர். தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை மந்திரி அமித்ஷா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்'' எனக் கொதிக்கிறார்.
''காஷ்மீரில் சுற்றுலா சென்றவர்களை இஸ்லாமியர்களா? என ஆடையை கழற்றி பார்த்துவிட்டு சுட்டுக் கொன்றவர்கள் ராணுவ உடையில் துப்பாக்கியோடு சென்று சுட்டு இஸ்லாமியர்கள் மீது பழி போட்டு இருக்கிறார்கள். இதற்கு முன்பும் ராணுவத்தை வைத்து பாஜக இதை செய்திருக்கிறது'' என நாக்கில் பல்லைப்போட்டு பேசுகிறார்கள் பலரும். இவர்கள் எப்படி இந்திய ஜனநாயகத்துக்கு உண்மையாக இருப்பார்கள்?

இதற்கு பதிலடி கொடுக்கும் நெட்டிசன்கள், ''தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து 67 பேர் மரணம் அடைந்தனர் அன்று தமிழக முதல்வரை ராஜினாமா செய்யுங்கள் என்று கூறினீர்களா?
இது அப்பட்டமான கேவலமான அரசியல் செய்கின்றோமே என்று உங்களுக்கு தெரியவில்லையா?
கோவையில் எந்த தெய்வத்தின் புண்ணியமோ குண்டு வைக்க போனவன் அதாலையே செத்தும் போய்ட்டான். அவனை காப்பாற்ற சிலிண்டர் வெடிப்புன்னு பொய்யை கூசாம பரப்புனானுங்க. அவனவன் வீட்டில் உள்ள பொண்டாட்டி பிள்ளை இரத்தம் சொட்ட செத்தா தான் இரக்கபடுவான் போல. 1997ல் குண்டு வெடிப்பை நேரில் பார்த்தவன் என்கிற முறையில் சொல்கிறேன். மரணபயம் கண்ணில் வந்துநின்றதை அறிந்தவன்..தமிழக மக்கள் இனியும் திருந்த மாட்டார்கள்.

எவ்வளவு கீழ் தரமான பதிவுகள்…கருணாநிதித்தனம் என்பது யாதெனில், தேசத்தில் எந்த சம்பவம் நடந்தாலும் மோடி பதவி விலக வேண்டும், அமித் ஷா பதவி விலக வேண்டும், ஆக எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும். இவ்வளவு பெரிய தாக்குதல் நடந்து இருக்கிறது ஒரு உபியாவது ஜம்முகாஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா பதவி விலக வேண்டும் என்று கூறுகிறார்களா? என்றால் இல்லை எனக் கொந்தளிக்கிறார்கள்.
பஹல்காம் தாக்குதலுக்கு மத்திய அரசு மீது பழிபோடுவர்களுக்கு ஒரு எச்சரிக்கையும், அதிர்ச்சியையும் ஊட்டும் செய்தி என்ன்வென்றால் சமூக ஊடகப் பதிவுகளுக்காக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த வாசிம் கான் மற்றும் தன்வீர் குரேஷி ஆகிய 2 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பஹல்காம் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பதிவிட்டிருந்தனர். அந்த நிலை தமிழகத்திலும் நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பாகிஸ்தானின் 7 பலவீனம்... இந்தியா திருப்பியடிக்க வேண்டிய சரியான தருணம்..!