பெரியார் சம்பந்தமான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பொன்முடி, விலைமாதுவுடன் சைவ, வைணவத்தை தொடர்புபடுத்தி பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவியை பறித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தனது சர்ச்சை பேச்சுக்கு பொன்முடி மன்னிப்பு கோரிய போதும், அவர் மீதான விமர்சனங்கள் மட்டும் முடிவுக்கு வந்ததாக தெரியவில்லை.

இதனிடையே அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சோசியல் மீடியாவை பார்த்து தான் தெரியவந்துள்ளது. இதனால் உளவுத்துறை மீதும் பயங்கர கோபத்தில் இருக்கிறாராம். அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு குறித்து சிஎம் ஆபீஸ்க்கு தகவல் சொல்லாத உளவுத்துறையை கடுமையா கண்டிச்சிருக்காராம் முதலமைச்சர்.
இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடியை தூக்கி வீசுங்கள்.. ஆவேசத்தில் கொந்தளித்த நடிகை விந்தியா.!!

அமைச்சர் பொன்முடி சர்ச்சையாக பேசினதுக்கு கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பி அவரோட கட்சி பதவி பறிக்கப்பட்டது. ஆனா சமூக ஊடகங்களில் இந்த வீடியோ பரவும் போது இந்த நிகழ்ச்சி விழுப்புறத்தில் நடந்ததா தவறுதலாக சொல்லப்பட்டிருக்கு. அது மட்டுமில்லாமல் இந்த சர்ச்சை பத்தி முதல்வருக்கு ரிப்போர்ட் போகவே இல்லையாம் சமூக ஊடகங்களில் பரவினதுக்கு அப்புறம்தான் முதலமைச்சருக்கு விஷயமே தெரிஞ்சிதாம்.

எஸ்பிசிஐடி முதல்ல கொடுத்த ரிப்போர்ட்லயும் விழுப்புரம்னே கொடுத்திருக்காங்க. அதுக்கப்புறமா கோர்ட்டுக்கு விஷயம் வரும்போதுதான் சென்னைன்னு குறிப்பிட்டுருக்காங்க. இதை சென்னை மாநகர போலீசும் உறுதி செஞ்சிருக்காங்க. இது முழுக்க முழுக்க மாநில உளவுத்துறையோட ஃபெயலியர்ன்னு முதலமைச்சர் அவங்க கிட்ட கடுமையாக கோவப்பட்டுருக்காராம்.
இதையும் படிங்க: இந்து சமயங்களை இழிவுபடுத்தியுள்ளார் பொன்முடி - உயர்நீதிமன்றம் அதிரடி..!