என் நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய கோவை மக்களுக்கும் என்னுடைய தோழர்களுக்கும் என்னுடைய வணக்கம். இந்த பூத் ஏஜென்ட் பயிற்சி பட்டறை என்பது வெறும் பெயர் தான், ஆனால் இங்க ஏதோ வேற பெரிய பங்கஷன் நடக்கற மாதிரி இருக்கு. இந்த பூத் லெவல் ஏஜென்ட்ஸ் மீட் அப்படினாலே, இது ஓட்டு சம்பந்தப்பட்டதாக தான் இருக்கும். ஆனால் என்னை பொறுத்தவரைக்கும் இது ஓட்டுக்காக மட்டுமே நடக்கிற ஒரு மீட் கிடையாது. என்னடா இவர் இப்படி சொல்லிட்டாரு அப்படின்னு நீங்க நினைக்கலாம். நம்ம தேர்தல் அரசியலில் தானே இருக்கும். இவர் ஏன் இப்படி சொன்னாரு அப்படின்னு உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம்?, அதுல தப்பு இல்லை ஏன்னா ஆட்சி அதிகாரம்னாலே அது ஓட்டு சம்பந்தப்பட்டது.

ஆனால் நம்ம ஆட்சிக்கு வந்து நாம என்ன செய்யப்போறோம். இதுவரைக்கும் பண்ண மாதிரி எல்லாம் நாம பண்ண போறது இல்ல. நம்ம ஆட்சிக்கு வரணும்னு நினைக்கிறதே மக்களுக்காகதான். மக்களோட நலனுக்காக தான் இந்த பூத் லெவல் ஏஜென்ஸ் பயிற்சி பட்டறை. மக்கள் கிட்ட இருந்து எப்படி நாம ஓட்டு வாங்க போறோம் அப்படிங்கங்கறத பத்தி மட்டுமே பேசப்போற ஒரு பயிற்சி பட்டறை கிடையாது. அது முக்கியம் தான் நான் இல்லை என சொல்லவில்லை.

அதையும் தாண்டி மக்களோட நாம் எப்படி இணைஞ்சி இருக்க போறோம். மக்களோட மக்களாக எப்படி ஒன்றிணைய போறோம் என்பது குறித்து, ஆலோசிப்பதற்காக தான் இந்த பயிற்சி பட்டறை. இதுக்கு முன்னாடி நிறைய பேர் வந்திருக்கலாம், போயிருக்கலாம், நிறைய பொய்களை சொல்லி இருக்கலாம் மக்களை ஏமாத்தி இருக்கலாம். இதெல்லாம் பண்ணி ஆட்சியை பிடிச்சிருக்கலாம். அதெல்லாம் பழைய கதை. அதுக்கெல்லாம் நான் இங்க வரல இனிமே அதெல்லாம் நடக்காது. நடக்க விட போறதும் கிடையாது.

இதையும் படிங்க: இனிமே அதெல்லாம் நடக்காது... தவெக பூத் கமிட்டி கூட்டத்தில் கர்ஜித்த விஜய்!
நம்ம கட்சி மேல மக்கள் கிட்ட ஒரு பெரிய நம்பிக்கையை கொண்டு வர போறதே தேர்தல் களப்பணியில பூத் லெவல் ஏஜென்ஸ்ஆன நீங்கதான். நீங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு போர் வீரனுக்கும் சமம். நம்ம ஏன் வந்திருக்கோம்? எதுக்கு வந்திருக்கோம்? எப்படிப்பட்ட ஒரு ஆட்சியை அமைக்க போறோம் அப்படிங்கிறதை மக்கள் கிட்ட கொண்டு போய் எடுத்து சொல்லுங்க?. அவங்க கேட்பாங்க. உங்களுக்கு என்ன அரசியல் அனுபவம் இருக்குன்னு கேபாங்க. ஆனா நீங்க யாரு நீங்க எப்படிப்பட்டவங்க உங்களுடைய தகுதி என்னன்னு எனக்கு தெரியும்.

“நம்மகிட்ட என்ன இல்ல? மனசுல நேர்மை இருக்கு, கரை கரைபடியாத அரசியல் செய்யணும்னு நம்பிக்கை இருக்கு, லட்சியம் இருக்கு, உழைக்கறதுக்கு தெம்பு இருக்கு, பேசுறதுக்கு உண்மை இருக்கு, செயல்படுறதுக்கு திறமை இருக்கு, அர்ப்பணிப்பு குணம் இருக்கு, களம் ரெடியா இருக்கு, இதுக்கு மேல என்ன வேணும். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்” எனக்கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'What Bro...Its Very Wrong Bro..' - கோவை விமான நிலையத்தை டேமேஜ் செய்த விஜய் ரசிகர்கள்!