சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வீணாக இருந்து வந்த தேரணி ராஜனை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் டீன்னாக இருந்த தேரணி ராஜன் பெரம்பலூர் அரசு மருத்துவ கல்லூரியில் டீனாகவும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் டீன் ஆகவும் பணிபுரிந்தவர்.

மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் பயின்ற தேரணி ராஜன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் டீனாக பணியாற்று வந்தார். இந்த நிலையில் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகத்தின் கூடுதல் இயக்குனராக தேரணி ராஜன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீனாக மருத்துவர் சாந்தாராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: A+ ரவுடிகளுக்கு செக்! சென்னைக்குள் வரத் தடை... போலீஸ் அதிரடி உத்தரவு
இதையும் படிங்க: சிந்து நதி எங்களுக்கே சொந்தம்... மீண்டும், மீண்டும் பாகிஸ்தான் திமிர் பேச்சு...!