தமிழகத்தில் ரவுடிகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு இடங்களில் பதுங்கி இருக்கும் ரவுடிகளை பிடித்து சிறையில் அடைத்தும் வருகின்றனர். இந்த நிலையில் சரித்திர பதிவேடு ரவுடிகள் மூன்று பேர் சென்னைக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. A+ சரித்திர பதிவேடு குற்றவாளிகளான ராக்கெட் ராஜா, நெற்குன்றம் சூர்யா, லெனின் ஆகியோர் சென்னைக்குள் வர காவல் ஆணையரகம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. தென் தமிழகத்தின் பிரபல ரவுடியாக அறியப்பட்ட வெங்கடேஷ் பண்ணையாரின் உதவியாளராக இருந்து, வெங்கடேஷ் பண்ணையார் மறைவிற்குப் பிறகு ராக்கெட் ராஜாவும் கொலை, அடிதடி என பல வழக்குகளில் கைதாகி பலமுறை சிறைக்கு சென்றவர்.
இதையும் படிங்க: சிந்து நதி எங்களுக்கே சொந்தம்... மீண்டும், மீண்டும் பாகிஸ்தான் திமிர் பேச்சு...!

அடுத்தது நெற்குன்றம் சூர்யா. சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த சூர்யா மீது எட்டு கொலை வழக்குகள் 200 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

மூன்றாவது நபர் தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட நடுவீரப்பட்டு பகுதியைச் சேர்ந்த லெனின். இவர் மீது கஞ்சா, ஆள் கடத்தல், கூலிக்கு கொலை செய்வது, நில மோசடி என பல்வேறு வழக்குகள் நிறுவையில் உள்ளன. இந்த மூன்று ரவுடிகளும் சென்னை எல்லைக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வழக்கு மற்றும் காவல் நிலைய விசாரணை தவிர்த்து வேறு காரணங்களுக்காக சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்குள் மூன்று ரவுடிகளும் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடிச்சது ஜாக்பாட்.. கெத்தான பதவியை கொத்தாக தூக்கப் போகும் பிடிஆர்..!