ஆளுநர்கள் தபால்காரராக இருக்க வேண்டியவர்கள், மாநிலங்களில் நடப்பதை மத்தியில் சொல்ல வேண்டுமே தவிர. இங்கு வந்து நாட்டமை செய்து கொண்டிருக்கக் கூடாது என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார்.

விருதுநகரில்,காஷ்மீர் கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில்,ரூ.68 கோடி மதிப்பீட்டில் விருதுநகர், வடமலைக்குறிச்சி சர்வீஸ் ரோடு பாலம் மற்றும் சூலக்கரை பாலம் ஆகிய பால பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. தில் கலந்து கொண்ட பின் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
இதையும் படிங்க: 11 மாதங்களில் முதல்வரே அவுட் ஆப் கண்ட்ரோல் ஆகப் போகிறார்.. விளாசிய தமிழிசை..!

அப்போது, ஆளுநர் தபால்காரர் என கூறுகின்றீர்கள். எதிர்கட்சியாக இருக்கும் போது ஏன்? ஆளுநரை சந்தித்தீர்கள் என தமிமிழசை கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பலபேர் கவர்னராக இருந்துள்ளனர். அப்போது வராத பிரச்சனை ஏன் இப்போது வருகிறது.? ஏனென்றால் ஆர்.என்.ரவி கவர்னராக இல்லாமல், பாஜகவின் மாநிலத் தலைவரைப்போல் செயல்படுகிறார் என்பதால் தான்.

இதுவரைக்கும் சுப்ரீம் கோர்ட்டில் யாருக்கும் இதுபோன்ற அரை விழுந்ததில்லை. மானம். ரோசம் உள்ள கவர்னராக இருந்தால், பதவியை ராஜினாமா செய்து விட்டு போயிருக்க வேண்டும். இதனால், தான் தமிழக முதலமைச்சர், ஆளுநரை தபால்காரர் என்று சொல்கிறார். தபால்காரராக இருக்க வேண்டியவர்கள், மாநிலங்களில் நடப்பதை மத்தியில் சொல்ல வேண்டுமே தவிர. இங்கு வந்து நாட்டமை செய்து கொண்டிருக்கக் கூடாது என்றார்.
இதையும் படிங்க: தமிழிசைக்கு நேரில் ஆறுதல்; திடீரென அமித் ஷா பிளானில் ஏற்பட்ட மாற்றம் - யார் அந்த 7 பேர்?