சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் பல்வேறு சட்டவிரோத சம்பவங்களை செய்ததாக கூறி சில நபர்களை குறி வைத்து பணம் பறிப்பில் ஈடுபடுகின்றனர். அதுமட்டுமல்லாமல் உயர் அதிகாரிகள் போல் தங்களை அடையாளப்படுத்தி பணம் பறிக்கும் சம்பவங்களும் நிகழ்கிறது. இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் சைபர் கிரைம் போலீசார் ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது வாட்ஸ் அப் பயனர்களை குறி வைத்து சைபர் குற்றங்கள் நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சைபர் க்ரைம் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருவரின் மொபைல் நம்பருக்கு ஆறு இலக்க ஓ டி பி குறியீடு எண்ணை மோசடியில் ஈடுபடும் நபர்கள் மெசேஜ் வாயிலாக அனுப்பி வைப்பார்கள் என்றும் பிறகு தவறுதலாக ஓடிபி எண் தங்களுக்கு அனுப்பப்பட்டதால் அதனை பகிருமாறு கேட்பார்கள் என்றும் கூறி உள்ளனர். எந்த சூழ்நிலையிலும் OTP அல்லது பாஸ்வோர்ட் களையோ பகிர்வதை தவிர்க்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: இரண்டாம் இன்னிங்ஸ் தொடங்க விரும்பிய இளைஞர்.. டேட்டிங் ஆப் மூலம் ரூ.6 கோடியை சுருட்டிய பெண்.. சைபர் கிரைம் உஷார்!!

அப்படி பாஸ்வேர்டுகளை பகிர்ந்தால் whatsapp கணக்கு ஹேக் செய்யப்பட்டு சைபர் குற்றவாளிகளின் கட்டுப்பாட்டுக்கு சென்று விடும் என்றும் ஆள்மாறாட்டம் செய்து உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு செய்திகளை அனுப்பி, அவசர உதவி, விபத்து செலவுகள், மருத்துவ தேவைகள், எனக்கேட்டு பணம் பறிப்பார்கள் என்றும் கூறியுள்ளனர்.

இப்படி ஹேக் செய்யப்பட்ட whatsapp எண்களில் இருந்து வரும் மெசேஜ்களை உண்மை என்று நம்பி பணத்தை அனுப்பிய பிறகு தான் இது மோசடி என்பதை சிலர் உணர்வதாகவும், எனவே யாராவது ஓடிபி பகிர சொன்னால், பகிர வேண்டாம் என்றும் யாரேனும் பாதிக்கப்பட்டு இருந்தால் உடனடியாக சைபர் கிரைமில் புகார் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: சைபர் மோசடி..! 50 லட்சத்தை இழந்த முதிய தம்பதி தற்கொலை..!