விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் கருத்துக் கேட்டபோது, ''என் சொந்த நாட்டில் எனக்குப் பாதுகாப்பு தேவையில்லை. நான் தான் இந்த நாட்டுக்கு பாதுகாப்பு'' என ஏளனமாக பதில் சொன்ன நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இப்போது மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இம்மாதம், அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து இந்த பாதுகாப்பு சீமானுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் அது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
இதையும் படிங்க: குமரி கடற்பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்க திட்டம்.. தமிழக மீனவர்களை குழிதோண்டி புதைக்கப் போகிறார்களா..?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் பற்றி விமர்சித்து வருவதால் திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் சீமான் வீட்டை அவ்வப்போது முற்றுகையிடுவது, பெட்ரோல் குண்டு வீச முற்பட்டது என தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் இருந்து வருவதால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, கோவை வந்தபோது, அவரை தமிழக உளவுத்துறை அதிகாரிகள் சந்தித்தனர். அப்போது, 'தமிழகத்தின் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது' எனக்கூறி, அதற்கான வாய்ப்புகளை விரிவாக எடுத்துக் கூறி உள்ளனர். ஆகையால், 'சீமானுக்கு மத்திய அரசின் பாதுகாப்பு தேவை' என வலியுத்தி உள்ளனர்.

இதையெல்லாம் உள்வாங்கிக் கொண்ட அமித் ஷா உடனே, 'இதுகுறித்த கோப்புகளை எனக்கு விரைவாக அனுப்புங்கள்' என உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது. விரைவில், சீமானுக்கு , இம்மாதம், அல்லது ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் இருந்து மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பபடுகிறது. ஏற்கனவே, தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்கி உள்ளது. சீமானுக்கும் வழங்கப்பட்டால், திராவிடக் கட்சிகளுக்கு அதிர்ச்சியளிப்பதாகவே இருக்கும்.
இதையும் படிங்க: குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட அரசியல்வாதிகள் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க முடியாது - மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம்