அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்புடன் இருதரப்பு நாடுகள் வர்த்தகம், ஆயுதக் கொள்முதல், ராணுவ உடன்பாடு, உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார். அதில் முக்கியமானது உலகின் அதிநவீன போர்விமானமான எப்-35 ஜெட் விமானக் கொள்முதலாகும்.
அமெரிக்காவிடம் இருந்து எப்35 போர் விமானத்தைக் கொள்முதல் செய்ய பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்ப் இடையே பேசப்பட்டது. இந்த எப்35 ஒரு விமானத்தின் விலை ரூ.968 கோடியாகும் அதாவது 11 லட்சம் டாலர்களாகும்.

இந்நிலையில் எப்35 போர்விமானக் கொள்முதல் குறித்து பிரதமர் மோடி தன்னிச்சையாகச் செயல்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா எக்ஸ் தளத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவது, “ அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நன்மதிப்பை பெற அந்நாட்டிடம் இருந்து அதிநவீன எப்35 ரக போர் விமானங்களை பிரதமர் மோடி வாங்க உள்ளார். ஆனால், மோடி அரசு தன்னிச்சையாக முடிவு செய்வதற்கு முன் தேசிய நலனைக் கருதியதா?
இதையும் படிங்க: இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம்.. மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் ராகுல்!

நாட்டின் பாதுகாப்பு நலன்களுக்கு ஏற்ப இந்திய விமானப்படை F-35 போர் விமானங்களை வாங்க விரும்புகிறதா? இந்திய விமானப்படையின் கருத்துக்கள் கேட்கப்பட்டதா? இந்திய விமானப்படை விமானிகள் மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் குழு எப்-35 போர் விமானங்களை வாங்குவதை ஆய்வு செய்ததா அப்படியென்றால் ஏன் பரிந்துரைக்கவில்லை? பாதுகாப்பு கொள்முதல் ஒப்பந்தங்களை முடிவு செய்யும் பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் எப்-35 விமானங்களை வாங்குவதற்கு ஏன் பரிந்துரை செய்யவில்லை? அப்படியிருக்கும்போது எவ்வாறு பிரதமர் மோடி தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
“ இந்தியா வாங்க இருக்கும் எப்35 விமானம் உலகிலேயே விலை அதிகமானது,ஒருவிமானத்தின் விலை ரூ.968 கோடி. இந்த முடிவு தேசத்தின் பொருளாதார, கொள்கை நலன்களுக்கு ஏற்றதா, ஏனென்றால் 100 போர்விமானங்கள் வாங்கினால், அதன் விலை ரூ.ஒரு லட்சம் கோடியை எட்டிவிடும். அமெரிக்க பாதுகாப்பு நிறுவனமான பென்டகன் சமீபத்தில் விடுத்த அறிக்கையில், எப்35 போர் விமானம் செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்பதை இந்தியா ஒப்புக்கொள்கிறதா?, விமானம் 65 செயல்பாட்டு விதிகளில் தோல்வி அடைந்ததா?

இந்த விமானத்தை வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்யும் முன், பிரதமர் மோடி பென்டகன் அறிக்கையை படித்துப் பார்த்தாரா, இந்திய விமானப் படையினர் படித்து ஆலோசித்தார்களா?. எப்-35 போர்விமானத்தில் ஆக்சிஸன் சிஸ்டம், ஹெட்மவுன்ட் டிஸ்ப்ளேயில் சிக்கல், விமானத்தை கட்டுப்படுத்தும் செயல்முறையில் சிக்கல் ஆகியவை நடந்துள்ளது. இந்த விமானத்தைக் கொள்முதல் செய்யும் முன் பாதுகாப்பு வல்லுநர்கள் குழு, இந்திய விமானப்படை ஆகியோர் ஆலோசித்தார்களா, ஆய்வு செய்தார்களா. அமெரிக்க விமானப்படையில் இருக்கும் எப்35 விமானங்கள் எந்த நேரத்திலும் பறக்கத் தகுதியற்றவை என்று அமெரிக்க அரசின் தணிக்கை அலுவலகம் அறிக்கை அளித்துள்ளது.
எப்35 விமானத்தில் பிளாக்4 சிஸ்டம் மென்பொருள் போதுமானதாக இல்லை, சரியாக இயங்கவில்லை, விமானத்தில் சிக்கல்கள் இருக்கின்றன அதனால்தான் இந்த விமானங்களை டெலிவரி செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது என்று அமெரிக்க தணிக்கைத்துறை அலுவலகம் அறிக்கை அளித்தள்ளது. இந்த விவகாரங்களை மோடி அரசும், நம்முடைய பாதுகாப்புத்துறை வல்லுநர்களும், விமானப்படையினரும் விசாரித்தார்களா?

எப்-35 ரக விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் முடிவில் தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா தயாராக இல்லை என்பதை மோடி அரசு கருத்தில் எடுத்துக்கொண்டதா?. இந்தியாவில் 5வது தலைமுறை போர்விமானத்தை தயாரிக்க ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் தயாராக இருக்கின்றன, தொழில்நுட்பத்தையும் பரிமாற்றம் செய்யத் தயாராக இருக்கின்றன. கடந்த 75 ஆண்டுகளில் பாதுகாப்பு கொள்முதலில் இந்த விஷயம் முக்கிய அளவுகோலாக இருக்கவேண்டமா.
இவ்வாறு ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மோடிக்கு நேருக்கு நேர் கால் மேல் கால் போட்டு அமர்ந்த விவேக் ராமசாமி..! "வெப்பம் தாங்கும் கல்" பரிசளித்த எலன் மஸ்க்