அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்டை சந்தித்தபோது, தடைசெய்யப்பட்ட காலிஸ்தானி அமைப்பான சீக்கியர்கள் அமெரிக்க மண்ணில் நடத்தும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா கரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார்.
டெல்லியில் துளசி கப்பார்டுடனான சந்திப்பின் போது, குர்பத்வந்த் சிங் பன்னுன் தலைமையிலான காலிஸ்தானி அமைப்பான சீக்கியர்கள் குறித்த இந்தியாவின் கவலைகளை சிங் வெளிப்படுத்தினார். சட்டவிரோத அமைப்புக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பிரிவினைவாத பிரச்சாரம், தீவிரவாத சம்பவங்களில் ஈடுபடுவதாகக் கூறப்படுவது உள்ளிட்ட சீக்கியர் நீதிக்கான அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த இந்தியாவின் கவலைகளை சிங் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. வெளிநாட்டு மண்ணில் இருந்து செயல்படும் காலிஸ்தானி சீக்கியர் நீதிக்கான அமைப்புகளால் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இதனை ராஜ்நாத் சிங் வலியுறித்தி உள்ளார். இந்தியா தனது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் காலிஸ்தான் சீக்கியர் நீதிக்கான அமைப்பை ஒடுக்க அமெரிக்கா உள்ளிட்ட உலகளாவிய நட்பு நாடுகளிடம் வலியுறுத்தி வருகிறது.
இதையும் படிங்க: தொகுதி மறுவரையறையால் வட இந்தியாவுக்கு மட்டும் சாதகமா.? முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலடி!

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்டுடன் இன்று தேசிய தலைநகர் டெல்லியில் இருதரப்பு சந்திப்பை நடத்தினார் அப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, உளவுத்துறை பகிர்வின் முக்கிய அம்சங்கள் குறித்து விவாதித்தனர்.
இதுகுறித்து தனது எக்ஸ்தளப்பதிவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்டை டெல்லியில் சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தும் நோக்கில், பாதுகாப்பு, தகவல் பகிர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம்" எனத் தெரிவித்துள்ளார்.

துளசி கப்பார்ட் தனது பல நாடுகளின் பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கும் வருகை தந்துள்ளார். துளசி கப்பார்டின் இந்தப்பயணம் நாளை டெல்லியில் நடைபெறும் ரைசினா உரையாடல் என்ற பன்னாட்டு பாதுகாப்பு அதிகாரிகளின் கூட்டத்துடன் முடிவடையும். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி துளசி கப்பார்டையும் அழைத்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், துளசி கப்பார்டுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். அப்போது இருவரும் இந்தியா-அமெரிக்க உறவின் பல அம்சங்களை விரிவாக விவாதித்ததாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு பிப்ரவரியில் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தைத் தொடர்ந்து துளசி கப்பார்டின் இந்திய பயணம் மேற்கொண்டுள்ளார். தனது அமெரிக்கப் பயணத்தின் போது, பிரதமர் மோடி, துளசி கப்பார்டை சந்தித்து, அவரை இந்தியா-அமெரிக்க நட்பின் 'வலுவான ஆதரவாளர்' என்று குறிப்பிட்டார். பிரதமர் மோடியை வரவேற்பது ஒரு 'கௌரவம்' என்று பதிலுக்கு துளசி கப்பார்ட் கூறினார். அமெரிக்கா-இந்தியா நட்பை தொடர்ந்து வலுப்படுத்த ஆவலுடன் இருப்பதாகவும் கப்பார்ட் கூறினார்.

அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் சமீர் சரணுடன் ஒரு முக்கிய உரையாடலிலும் கப்பார்ட் பங்கேற்க உள்ளார். ரைசினா உரையாடலின் 10வது பதிப்பை வெளியுறவு அமைச்சகம் அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையுடன் இணைந்து நடத்துகிறது.
பிரதமர் மோடி இன்று ரைசினா உரையாடலைத் தொடங்கி வைப்பார். இதில் சிறப்பு விருந்தினரான நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் சிறப்புரையாற்றுவார். மார்ச் 17-19 வரை டெல்லியில் நடைபெறவிருக்கும் ரைசினா உரையாடல், உலக சமூகம் எதிர்கொள்ளும் மிகவும் சவாலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உறுதிபூண்டுள்ள இந்தியாவின் புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதாரம் குறித்த முக்கியத்துவம் வாாய்ந்த மாநாடாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: 2 கிராம் தோடுக்காக மூதாட்டி கொலை.. குடிபோதையில் இளைஞர்கள் வெறிச்செயல்.. குற்றவாளிகளை கச்சிதமாக பிடித்த போலீஸ்..