2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டியி ஹைதராபாத் அணியும் மும்பை அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். இஷான் கிஷன் 1 ரன்னில் ஆட்டமிழக்க, மறுபுறம் டிராவிஸ் ஹெட் டக் அவுட் ஆனார்.

பின்னர் வந்த அபிஷேக் சர்மா 8 ரன்களிலும், நிதிஷ் குமார் ரெட்டி 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 13 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஐதராபாத் அணி தடுமாறியது. அப்போது வந்த கிளாசன் 44 பந்துகளில் 71 ரன்களையும் அன்கிட் வர்மா 14 பந்துகளில் 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த அபினவ் மனோகர் 37 பந்துகளில் 43 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் பேட் கம்மீஸ் ஒரு ரன்னில் அவுட் ஆனார்.
இதையும் படிங்க: பேட்டிங்கில் தொடக்கம் முதலே தடுமாற்றம்... சொந்த மண்ணில் வைத்து LSG-ஐ தோற்கடித்த DC!!

இதன் மூலம் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. 144 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரிக்கெல்டன் மற்றும் வில் ஜேக்ஸ் களமிறங்கினர். ரிக்கெல்டன் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். வில் ஜேக்ஸ் 19 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.

பின்னர் வந்த ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி, 46 பந்துகளில் 8 பவுண்ட்ரிகள் 3 சிக்ஸர்கள் அடித்து 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் நிதானமாக ஆடி அணியை வெற்றி பெற செய்தார். 19 பந்துகளில் 5 பவுண்ட்ரிகள் 2 சிக்ஸர்கள் அடித்து 40 ரன்கள் குவித்தார். மறுபுறம் திலக் வர்மா 2 ரன்கள் சேர்த்திருந்தார். இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: சொந்த மண்ணில் தடுமாறிய LSG... டெல்லி அணிக்கு 160 ரன்கள் இலக்கு!!