நடிகர் அஜித்தின் 63வது திரைப்படம் தான் ‛குட் பேட் அக்லி'. இந்த திரைப்டத்தை இயக்குநர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். பிரபு, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு, பிரியா பிரகாஷ் வாரியார், ரகுராம் உள்பட பல நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். திரைப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து அசத்தியுள்ளார். இந்த படம் தற்பொழுது வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் நடித்த பிரசன்னா தனது பதிவில்,"எனக்குப் பிடித்த நடிகருடன் சேர்ந்து நடித்த சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. இந்த உன்னதமான மனிதருடன் செலவிட்ட தருணங்களை எப்போதும் நினைவில் கொள்வேன், லவ் யூ அஜித் சார். ஆதிக் ரவிச்சந்திரனுக்கு நன்றி" என பதிவிட்டு இருந்தார்.
அவரை போல படத்தின் வெற்றியை குறித்து தன்னிடம் அஜித் பேசியதை பகிர்ந்து கொண்ட அப்படத்தின் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன். அதில், ஓகே படம் ஹிட் ஆகி விட்டது, படம் ப்ளாக்பஸ்டர். படத்தின் வெற்றியை மறந்து விடு. இந்த வெற்றியை தலைக்கு ஏற்றிக் கொள்ள வேண்டாம். அதே போல் தோல்வியை வீட்டுக்கு எடுத்து செல்ல வேண்டாம். அடுத்து என்ன என்று நிதானித்து அறிந்து பணிபுரிய தொடங்குங்கள்” என்று ஏகே தெரிவித்தார் என கூறினார்.
இதையும் படிங்க: சல்மான் கானை சீண்டிய இளைஞர் அதிரடி கைது...! போலீசுக்கே ஷாக் கொடுத்த வெடிகுண்டு வாலிபர்..!

இவர்களை தொடர்ந்து ஏற்கனவே இப்படத்தில் "தொட்டு தொட்டு பேசும் சுல்தானா" பாடலுக்கு நடனம் ஆடி ஃபேமஸ் ஆகி இருக்கும் பிரியா வாரியார், படத்தின் பிடிஎஸ் புகைப்படங்களை பகிர்ந்து அதில், "உங்கள் மீது எனக்கு இருக்கும் மரியாதையை எந்த அளவுக்கு வார்த்தைகளால் எழுதினாலும் போதாது.முதல் முறை பேசியது தொடங்கி கடைசி நாள் ஷூட்டிங் வரை நன்றாக உணர வைத்தீர்கள். யாரும் வேறு விதமாக உணரக்கூடாது என உறுதி செய்தீர்கள். செட்டில் நீங்கள் இருக்கும் போது அனைவரையும் பார்த்துக் கொண்டீர்கள்.

Cruise கப்பலில் பயணித்த போது நாம் ஒன்றாக சாப்பிட்ட உணவு, அடித்த ஜோக்குகள், அனைத்தும் மிக சிறப்பாக இருந்தது. உங்களை போல ஒருவரை நான் பார்த்தது இல்லை. கார், குடும்பம், பயணம் செய்வது, ரேசிங் போன்ற விஷயங்களை பற்றி பேசும்போது உங்கள் கண்கள் மாறும் விதம் அப்படி இருக்கும். உங்களை சுற்றி இருக்கும் நபர்களை பார்த்து கவனித்து அவர்களை பாராட்டுவீர்கள். உங்களது பொறுமை மற்றும் அர்ப்பணிப்பு தான் என்னை போன்றவர்களுக்கு ஒரு உத்வேகத்தை தருகிறது." என பதிவிட்டு இருந்தார்.

இந்த சூழலில், தற்பொழுது குட் பேட் அக்லி படத்தின் ட்ரெய்லரில் 'ஒத்த ரூபாய் தாரேன்' பாட்டை போட்டதுக்கு ஒத்த ரூபாய் வேண்டாம் ரூ.5 கோடி போதும் என இளையராஜா தற்பொழுது இந்த பாடலை பயன்படுத்தியதற்காக இழப்பீடு கேட்டு உள்ளார். தரவில்லை என்றால் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என இளையராஜா தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இப்படி பிரச்சனைகள் காட்டுத்தீயார் பரவ தற்பொழுது படத்தின் வெற்றியை ஹைதராபாத்தில் கொண்டாடியுள்ளனர் படக்குழுவினர். இதில் கலந்து கொண்ட "தொட்டு தொட்டு பேசும் சுல்தானா" நடிகை பிரியா வாரியர், படத்தின் அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, என்ன சொல்வது என்று தெரியவில்லை.
இதனை நான் உண்மையில் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய செல்போனுக்கு தொடர்ந்து வாழ்த்து மடல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதாவது, யாரும் எதிர்பாராத வகையில், 2018-ம் ஆண்டு வெளியான 'அடார் லவ்' படத்தில் நான் வைரலானது போல, மீண்டும் வைரல் ஆகிவிட்டேன் என்று என்னிடம் சொல்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் நடிகை சிம்ரன் ஆடிய 'தொட்டு தொட்டு பேசும் சுல்தானா' பாடலுக்கு, நான் சரியாக ஆடி அதற்கு ஏற்ற பங்களிப்பை கொடுப்பேன் என்று நம்பிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு நன்றி. மேலும், நடிகர் அஜித் சாருக்கு தீவிர ரசிகையாக மாறிவிட்டேன். அந்த அளவிற்கு அவர் எனக்கு உறுதுணையாக இருந்தார். வெளியே பார்ப்பதை விட உண்மையில் ஜாலியான மனிதர். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன" என பெருமையாக பேசியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த இளசுகள், தல என்றால் சும்மாவா... அஜித்தை பிடிக்காதவன் இருப்பானா... என தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பெற்ற தாய்க்கும் கட்டின மனைவிக்கும் பிரம்மாண்ட கோவில்..! ராகவா லாரன்ஸை ஃபாலோ செய்த மதுரை முத்து..!