மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தான் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
இந்த ட்ரெய்லரை பார்த்த பலருக்கும் படம் பிடித்து போக, தற்பொழுது இப்படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருகின்றனர். இந்த சூழலில் சமீபத்தில் இப்படத்தின் அறிமுக விழாவில் பேசிய நடிகர் சிவகுமார், ஒரு படம் நடிப்பதற்கு முன்பு கண்டிப்பாக நன்றாக வரும் என்கின்ற 100 சதவீத நம்பிக்கையில் தான் படம் செய்கிறோம்.

ஆனால் அதே நம்பிக்கை, ஊக்கம், ரசிகர்களிடமிருந்து வரும்போதுதான் அது மனதிற்கு நிறைவாகிறது. பள்ளி கல்லூரிகளில் தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் மாணவனை போல இந்த படத்தின் ரிசல்ட்டுக்காக மே-1ம் தேதி வரை நாங்கள் அனைவரும் காத்திருப்போம். இந்த படத்தின் இயக்குனருக்கு வயது என பார்த்தால் வெறும் 24 வயதுதான். அதனாலேயே தயாரிப்பாளர்கள் முதல் எல்லோரும் பயந்தார்கள்.
ஆனால் நான் தான் வயது முக்கியமில்லை, கதைதான் முக்கியம் என்று நடிக்க ஒப்புக் கொண்டேன். 18 வயது பையனுக்கு அப்பாவாக நடிக்க எந்த ஹீரோவும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். அதனாலேயே இந்த படம் எங்கு சென்றாலும் மீண்டும் என்னிடம்தான் வரும் என்று நம்பினேன் அப்படியே வந்தது.
இதையும் படிங்க: நடிகர் சிம்புவின் "STR 49" படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

எனக்கு ஜோடி சிம்ரன் என்றதும் எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். பார்ப்பவர்கள் எல்லாரும் சிம்ரன் எப்படிங்க உங்க கூட நடிக்க சம்மதிச்சாங்க என்று கேட்கிறார்கள். ஏன் நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா. அந்த தகுதி எனக்கில்லையா என்ன? என்னைப்போலவே அவரும் கதையை நம்பித்தான் இந்த படத்திற்கு நடிக்க வந்தார். அவர் இப்போதும் ஹீரோயின்தான். இந்த படத்திலும் நான் ஹீரோ, அவர் ஹீரோயின் என ஆதங்கமாக கூறியிருந்தார்.

அவரை தொடர்ந்து, நடிகை சிம்ரன், "இந்த படம் நல்ல குடும்ப கதையாக இருப்பதால் 'டூரிஸ்ட் பேமிலி' படத்தில் நடிக்க உடனடியாக சரி என்று கூறிவிட்டேன். மற்றொரு காரணம், இயக்குனரும் நடிகருமான சசிகுமார். அவர் ஒரு மிகப்பெரிய இயக்குனர் மற்றும் நடிகர். அவருடன் நடிப்பது எனக்கு பெருமை தான். அதைவிட நீண்ட நாள் ஆசை என்றே சொல்லலாம். சினிமாவை நீங்கள் தான் பிரித்து பார்க்கிறீர்கள். உண்மையில், சினிமாவில் ஜூனியர், சீனியர் என்ற பேதம் இல்லை, அப்படி இருக்கவும் கூடாது. திறமைக்கு தான் இங்கு முதலிடம். அந்த வகையில் சசிகுமாருடன் இணைந்து நடித்ததை எனது வாழ்நாள் அதிர்ஷ்டம் என்று தான் சொல்வேன் என பக்குவமாக பேசினார்.

இந்த நிலையில், இப்படத்திற்கான ப்ரீ ரிலீஸ் காட்சி வெளியிடப்பட்டது. அதில் கலந்துகொண்ட சமுத்திரகனி, டி.ஜே ஞானவேல், புஷ்கர் காயத்ரி, விஜய் ஆண்டனி, தமிழரசன் பச்சைமுத்து முதலானோர் கலந்து கொண்டு படத்தை பார்த்து ரசித்தனர். பின்பு படத்தை பார்த்து நெகிழ்ந்து போன இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி படத்தை குறித்து புகழாரம் சூட்டினார்.
அதன்படி, "இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த திரைப்படமாக 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தை கூறுவேன். உண்மையிலேயே இந்த படம் மிகவும் அருமையாகவும் மகிழ்விக்கும் வகையிலும் பெருமையாகவும் இருந்தது. இந்த படத்தை பார்ப்பவர்கள் கண்டிப்பாக இலங்கை தமிழர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றே சொல்வர். சசிகுமாருக்கு எப்படி சுப்பிரமணியபுரமோ, எனக்கு எப்படி நாடோடிகளோ அந்தவகையில் உங்களுக்கு தான் இந்த படம். இதனை உங்களால் வெல்லவே முடியாது.

இந்த படம் அறத்தை பற்றி சொல்லும் படம், அன்பு அதிகமாக கொடுக்கும் படம், அதுமட்டுமல்லாமல் நேர்மையான படம்" என புகழ்ந்து தள்ளினார்.
இதையும் படிங்க: 'அரண்மனை' குறித்து சுந்தர்.சி சொன்ன ரகசியம்..! வியப்பில் உறைந்து போனேன் - வடிவேலு மாஸ் ஸ்பீச்..!