ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டி தாக்குதலுக்கு 26 பேர் பரிதாபமாக உயிர் உள்ளது. மேலும் 12-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தங்களது உறவுகளை இழந்த சுற்றுலா பயணிகள் கதறி துடிக்கும் வீடியோ காட்சிகள் காண்போரை கலங்கச் செய்கிறது. இந்த கோர சம்பவத்திற்கு உலக நாடுகளில் உள்ள அனைத்து தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள பல இடங்களில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பாரமுல்லா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தேடுதல் வேட்டையின் போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது இதில் இரண்டு பயங்கரவாதிகளை ராணுவத்தினர் வேட்டையாடியுள்ளனர்.
இதையும் படிங்க: தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம்! ஜம்மு காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம்...

எனவே ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் வெடிப்பொருட்கள், ஆயுதங்கள் பயன்கள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: கையில் துப்பாக்கி.. குரூர புத்தி.. மக்களை சுட்டப்படியே ஓடும் தீவிரவாதியின் முதல் புகைப்படம்..!