முன்னதாக சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி அளிக்க வலியுறுத்தி அதிமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். அப்போது செங்கோட்டையன் அமைதியாக இருந்துள்ளார். சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தாலும் கூட செங்கோட்டையன் சட்டசபைக்குள் அமர்ந்து கேள்வி கேட்டு பதில் பெறுகிறார். சில நாட்களுக்கு முன்பு அவிநாசி அத்திக்கடவு திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இதற்காக வைக்கப்பட்ட பேனர்களில் அதிமுக தலைவர்கள் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் புகைப்படங்கள் இல்லை. இதை காரணம் காட்டி அந்த நிகழ்வில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அதில் இருந்து செங்கோட்டையனுக்கு தனி அணி உருவாக ஆரம்பித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையை செங்கோட்டையன் எதிர்ப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பாஜகவுடன் ஏன் கூட்டணி.? குழம்பும் நிர்வாகிகள்.. அதிமுக மா.செ. கூட்டத்தைக் கூட்டும் இபிஎஸ்.!

இந்த சூழலில் அப்பாவுவை செங்கோட்டையன் தனியாக சந்தித்து பேசியுள்ளார். இதனிடையே செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவையும் சென்னையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்துள்ளார். இதன் மூலம் அதிமுகவில் செங்கோட்டையன் – எடப்பாடி இடையே மோதல் வெடித்துள்ளதாக தகவல்கள் கசிந்தது. இந்த நிலையில் அதிமுக- பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. இதற்கும் அதிமுகவில் சில தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனால் அதிமுகவின் செயற்குழு கூட்டம், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஆகியவற்றை எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ளார். முன்னதாக அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் இன்று இரவு விருந்து அளித்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த விருந்து நிகழ்ச்சியில் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்திருப்பது அதிமுகவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பாஜகவுடன் கூட்டணி வைப்பதும், பாடையில் படுப்பதும் ஒன்னு... அதிமுகவை அலறவிட்ட நாஞ்சில் சம்பத்...!