பாகிஸ்தான் சிந்து மாகாணத்தின் பதின் எனும் பகுதியை நோக்கி ஒரு வேன் சென்றுக்கொண்டிருந்தது. அந்த வேனில் பஞ்சாப் மாகாணத்தின் லபாரியைச் சேர்ந்த கொல்ஹி எனும் பழங்குடியின மக்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். இவர்கள் பலூசிஸ்தான் மாகாணத்தில் நெல் அறுவடைப் பணிக்காகச் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர்கள் சென்ற வேன் மலைப்பகுதியில் அதிவேகமாகச் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து. இதனால் அந்த வேன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அந்த வேனில் பயணித்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: #PAHALGAM! வாகா எல்லை மூடப்படும்...இனி பாகிஸ்தானியர்களுக்கு விசா கிடையாது! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த அந்நாட்டு அதிகாரிகள் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் பலரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. பாகிஸ்தானின் பெரும்பாலான சாலைகள் முறையாகப் பராமரிக்கப்படாததினால் அந்நாட்டில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாகிஸ்தானியர்களைவிட மோசம்...தமிழகத்தில் கேவலமான வெறுப்பு அரசியல்... பழிபோடும் விமர்சனம்