காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பதிலடியாக சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தம், அட்டாரி - வாகா எல்லை மூடல் உள்ளிட்ட ஐந்து நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் சம்ப்வம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக ராஜதந்திர நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. அதன்படி ஐந்து முக்கிய எதிர் நடவடிக்கைகளை வெளியுறவு துறை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
1. இதன்படி சிந்து நதி, கிளை நதிகளில் இருந்து ஆண்டுதோறும் 39 பில்லியன் கன மீட்டர் நீர் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குப் பாயும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடை நிறுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நதி நீர் பகிர்வை நிர்வகிக்கும் இந்த ஒப்பந்தம், பல ஆண்டுகளாக நீடித்த மோதல்களுக்கு மத்தியிலும் கூட நிறுத்தப்படவில்லை.

2. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் தொடர்பு சாலை சின்னமாக கருதப்படும் அட்டாரி-வாகா எல்லை மூடல் உடனடியாக அமலுக்கு வருகிறது.
3. பாகிஸ்தான் குடிமக்கள் இந்தியாவுக்குள் நுழைவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் விசா சேவைகள் மற்றும் எல்லை தாண்டிய பயண அனுமதிகளும் அடங்கும்.
4. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் துாதரகத்தில் பணி அமர்த்தப்பட்ட அனைத்து ராணுவ ஆலோசகர்களும் வெளியேற்றப்பட வேண்டும்.
5. டெல்லியில் தனது ராஜதந்திர இருப்பை 55 லிருந்து 30 ஆகக் குறைக்குமாறு இந்தியா, பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டுள்ளது.
6. இது தவிர பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நாளை அனைத்து கட்சிகள் கூட்டம் நடைபெறும்.
இதையும் படிங்க: இந்தியா நம்மைத் தாக்கப்போகுது... கலக்கத்தில் துடிதுடிக்கும் பாகிஸ்தான் மக்கள்..!