எந்த நேரத்திலும் திமுக கூட்டணி உடையும் அபாயத்தில் இருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி முடிவாகிவிட்ட நிலையில், வேறு கட்சிகள் எதுவும் கூட்டணிக்கு வருமா என்று தெரியவில்லை. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூட்டணி தொடர்பாகப் பேட்டி அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், "பல கட்சிகள் அதிமுகவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. அற்புதமான கூட்டணியை எடப்பாடி பழனிச்சாமி அமைப்பார் .அதிமுக தேர்தலில் வெல்லும். எடப்பாடி முதல்வராக வருவார்.

நாங்கள் ஏற்கனவே சொல்லி இருக்கிறோம். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அங்கு விரும்பி இருக்கவில்லை. கூட்டணி கட்சிகள் எல்லாம் அங்கு சூழ்நிலை கைதிகளாகத்தான் இருக்கின்றன. எல்லா கட்சிகளையும் மனம் வெதும்பிதான் அங்கு இருக்கின்றன.
எந்த நேரத்திலும் திமுக கூட்டணி உடையும் அபாயம் இருக்கிறது. பாமக வேறு எந்த கூட்டணிக்கும் செல்வதாக எதுவும் சொல்லவில்லை. சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு பாமக எல்லா தலைவர்களுக்கும் அழைப்பு கொடுக்கும். கலந்து கொள்ள விருப்பமுள்ள தலைவர்கள் அதில் கலந்து கொள்வார்கள்.

கூட்டணி முடிவுகள் இனிமேல்தான் தெரிய வரும். திமுக கூட்டணியில் இருந்து எந்தெந்த கட்சிகள் வெளியே செல்கின்றன என்று பாருங்கள். அதிமுக கூட்டணிக்கு எந்தெந்த கட்சிகள் வருகின்றன என்று பாருங்கள். ஒற்றை முடிவுதான். தமிழக அரசியலில் இருந்து திமுகவை அகற்ற வேண்டும். அவ்வளவுதான்." என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
இதையும் படிங்க: எடப்பாடி கொடுத்த விருந்தை புறக்கணித்த செங்கோட்டையன்... மீண்டும் அதிமுகவில் பரபரப்பு!!
இதையும் படிங்க: பாஜகவுடன் ஏன் கூட்டணி.? குழம்பும் நிர்வாகிகள்.. அதிமுக மா.செ. கூட்டத்தைக் கூட்டும் இபிஎஸ்.!