காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பைசரன் பகுதியில், ஏப்ரல் 22 அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் குழு என்று கருதப்படும் தி ரெசிஸ்டண்ட் ஃபிரண்ட் (டிஆர்எஃப்) அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது.

மேலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தை குறித்து பார்த்தால் அந்த இடத்தில் இருந்து தப்பித்து கூட ஓடமுடியாத நிலையில் இருந்துள்ளது. இந்த தாக்குதல் நடந்த இடத்தை பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் தான் இந்த தாக்குதல் நடைபெற்றது. இங்கு காடுகள், ஏரிகள், புல்வெளிகள் மட்டுமே அதிகம் காணப்படும். இந்த இடத்திற்கு நடந்தோ அல்லது குதிரை மூலமாகவோத்தான் செல்ல முடியும். கார்களிலோ அல்லது கனரக வாகனங்களிலோ செல்ல முடியாது. இங்குச் சென்ற சுற்றுலா பயணிகளைத்தான் தீவிரவாதிகள் மிக நெருக்கமாக இருந்து சுட்டுக் கொன்றனர்.
இதையும் படிங்க: சுந்தர் சி பெரிய தீர்க்கதரிசி தான்..! அவர் சொன்னது இப்போ பலிச்சிருக்கு.. சந்தானம் சொன்ன விஷயம்..!

இதனை அடுத்து, இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் போருக்கு தயாராகி வருவதால் இரண்டு நாடுகளில் உள்ள மக்களும் பதற்றத்தில் உள்ளனர். மேலும், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்ல கூடிய நீர் முதல் போக்குவரத்து வரை அனைத்தும் தடை செய்துள்ளது இந்திய அரசாங்கம். அதே போல் பாகிஸ்தானிலும் வான்வழி பயணங்களில் இந்தியாவிற்கு தடைவித்தித்துள்ளது. இனி எந்த பேச்சுவார்த்தையும் அல்ல, இந்தியா அடித்தால் திருப்பி அடிப்போம் என பாகிஸ்தானும் எதிர்த்து நிற்கிறது. எனவே உலகநாடுகள் அனைத்தும் இந்த பிரச்சனையை உற்றுநோக்கி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் இந்தியா பாகிஸ்தான் இரண்டு நாடுகளும் தங்களது ஏவுகணைகளை சோதனை செய்து வருகின்றனர். இதனால் இருநாடுகளிடையேயும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது .

இந்த நிலையில், நடிகை காஜல் அகர்வால், அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது வேதனையை பகிர்ந்துள்ளார். அதில், " பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் இந்து - முஸ்லீம்களுக்கு இடையேயான பிரச்சனை கிடையாது. ஆனால் அதைத்தான் வெறுப்பாளர்கள் விரும்புகிறார்கள். உண்மையில் அங்கு நடந்தது பயங்கரவாதத்துக்கும் மனிதநேயத்துக்குமான மோதல். ஒரு பெயரின் அடிப்படையில் யாரையும் பிரிக்க வேண்டாம், பிரிக்கவும் கூடாது. பிரிவினை எப்போதும் பயத்தையும் அதிக எதிர்ப்பு உணர்வையும் மட்டுமே உருவாக்கும். ஆனால் நாம் ஒரே இனம் என்ற உணர்வு நம் அனைவருக்கும் இருக்க வேண்டும். நாம் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த இக்கட்டான சூழலில் ஒன்று பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை காஜல் அகர்வாலின் இந்த பதிவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
இதையும் படிங்க: சசிகுமாருடன் நடிக்க ஆசைப்பட்டேன் நடித்தேன்..! படம் அப்படி இருக்கும் - நடிகை சிம்ரன் ஓபன் டாக்..!