தமிழ் சினிமாவில், இதுவரை, மகிழ்திருமேனி இயக்கத்தில் 'தடையறத் தாக்க', ரவி தியாகராஜன் இயக்கத்தில் 'என்னமோ ஏதோ', ஸ்ரீகாந்த் அட்டலா இயக்கத்தில் 'பிரம்மோற்சவம்', ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'ஸ்பைடர்', ஹச் வினோத் இயக்கத்தில் 'தீரன் அதிகாரம் ஒன்று',ராஜாத் ரவிஷங்கர் இயக்கத்தில் 'தேவ்', செல்வராகவன் இயக்கத்தில் 'என்.ஜி.கே', ரவிக்குமார் ஆர் இயக்கத்தில் 'அயலான்', ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார் ரகுல் பிரீத் சிங்.

இவர் பிறப்பால் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த ரகுல் பிரீத் சிங்கின் தந்தை ராஜேந்தர் சிங், ராணுவ அதிகாரியாக பணியாற்றியவர். ஆதலால் தனது சிறுவதில் இருந்து டெல்லியில் உள்ள ராணுவ பள்ளியில் படித்து முடித்து, பின் டெல்லி 'ஜீசஸ் மேரி பல்கலைக்கழகத்தில்' ஸ்டிரிக்ட் ஆபிசர்கள் மத்தியில் தனது பட்டப்படிப்பை முடித்தார்.
பின் வடிவழகியாக அவதாரம் எடுத்த ரகுல் பல போட்டிகளில் கலந்து வெற்றிகளை குவித்து, அதன் பின், சினிமாவில் நடிக்க வந்தார். இப்படி தனது வாழ்க்கை முழுவதையும் ஸ்டிக்ட்டாக கழித்த ரகுல், ஜாக்கி பக்னானியை திருமணம் செய்த பிறகு பல இடங்களுக்கு அவருடன் சென்று தனது வாழ்க்கையை இன்பமாக கழித்து வருகிறார்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் டிசைனருடன் நெருக்கம்... துரோகி... பிரபல நடிகையை நார் நாராக கிழிக்கும் மக்கள்..!

அதுமட்டுமல்லாமல், ரகுல் பிரித் சிங் தனது காதல் ஜோடியான ஜாக்கி பக்னானியை திருமணம் செய்த பின், அவரை எங்கு அழைத்து சென்றாலும் கைகளை கோர்த்து கொண்டும், கட்டி அனைத்தபடியும், முத்தம் கொடுத்து அன்பை பகிர்வதும், நீச்சல் குளங்களில் ஒன்றாக குளிப்பதும் என பிசியாக தனது வாழக்கையை கழித்து வருவதுடன் அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு பல இளசுகளின் இதயத்தை கொள்ளை கொண்டு வருகிறார்.

இந்த சூழலில், கடந்த சில நாட்களாக ரகுல் பிரீத் சிங் தனது அழகை மேம்படுத்துவதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார் என சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில் நீண்ட நாட்களாக எந்த பதிலும் கொடுக்காமல் அமைதியாக இருந்த அவர், தற்பொழுது தனியார் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், நான் இதுவரை எந்தவிதமான அறுவை சிகிச்சையும் செய்ததில்லை. கடவுள் கொடுத்த கிருபையால் எனக்கு அழகான முகம் உள்ளது. அதனால் ஏற்கனவே நான் அழகு..பின் எதற்கு எக்ஸ்ட்ரா அழகு என்பதால் என்முக அழகை மேம்படுத்த வேண்டும் என நான் எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

அதற்காக முகத்தில் அறுவை சிகிச்சை செய்ப்பவர்களை நான் என்றும் தவறு என சொல்லவில்லை. அது அவர்களது விருப்பம் அதில் நான் தலையிட விரும்பவில்லை என கூறினார்.
இதையும் படிங்க: Anna serial: சண்முகத்தின் சபதம்... ஆச்சர்யத்தில் உறைந்த பரணி! அண்ணா சீரியல் அப்டேட்!